கூத்தாநல்லூர் வட்டம், சித்திரையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் வைர விழாவை முன்னிட்டு, நுழைவு வாயில் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அய்.வி. குமரேசன் தலைமை வகித்தார். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ப. அறிவழகன், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் வீ. விமலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் கா. லதா வரவேற்றார்.
சித்திரையூர் நடுநிலைப்பள்ளியின் வைர விழாவை முன்னிட்டு, ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நுழைவு வாயிலை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் இரா. விஜயா திறந்து வைத்தார்.
முன்னதாக, ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து, பள்ளிக்கு நாற்காலி, பாய், தட்டுகள் உள்ளிட்ட தேவையான பொருள்களை சீர்வரிசையாக தலைமையாசிரியரிடம் வழங்கினர்.
விழாவில், பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் ஏ.வி. முருகையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
சித்தராமையா ராஜிநாமா செய்ய காங்கிரஸ் மேலிடம் அழுத்தம்?

விடைத்தாள் மதிப்பீடு இணையதளப் பக்கம் ஹேக் செய்யப்படவில்லை: சிபிஎஸ்இ
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


