திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் பேரூராட்சி அலுவலக நாளேடு, தன்பதிவேடு, நபார்டு பணிகள் பதிவேடு, ஊழியர் வருகைப் பதிவேடு, சொத்து வரிவிதிப்புப் பதிவேடு, அஞ்சல் வில்லைப் பதிவேடு, உள்ளூர் தபால் பதிவேடு, காசோலை பதிவேடு, இருப்புப் பதிவேடு ஆகியவற்றை பார்வையிட்டதுடன், தினசரி துப்புரவுப் பணி மேற்கொள்ளும் பணியாளர்களின் ஊதியப் பதிவேட்டையும் ஆய்வு
செய்தார்.
பேரூராட்சியில் குப்பைகள் தேங்கா வண்ணம் தினசரி துப்புரவுப் பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும், பொது கழிவறைகளை பொதுமக்கள் பயன்படுத்தும் வண்ணம் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் எனவும், மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர்த் தொட்டி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரை முறைப்படுத்தி, தினசரி தடையின்றி வழங்க வேண்டும் எனவும் பேரூராட்சி செயல் அலுவலரிடம் அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) விஸ்வநாதன், செயல் அலுவலர் சிவகுமார், வட்டாட்சியர் அன்பழகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிணற்றில் இறங்கி தவித்த முதியவா் மீட்பு
சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 93.68 லட்சம்

ஏப்ரல் - ஜூன் காலாண்டு: சிட்டி யூனியன் வங்கிக்கு ரூ.383 கோடி லாபம்

பாம்பு கடித்து சிறுவன் உயிரிழப்பு
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi


