தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

முத்திரைக் கொல்லர் பணியிடங்கள்: நுழைவுச் சீட்டு பெற அழைப்பு

தொழிலாளர் துறையில் காலியாக உள்ள முத்திரைக் கொல்லர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள், நுழைவுச்சீட்டை

Updated On :30 ஜனவரி 2024, 11:10 pm IST

தொழிலாளர் துறையில் காலியாக உள்ள முத்திரைக் கொல்லர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள், நுழைவுச்சீட்டை நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் பெற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர் பாஸ்கரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தொழிலாளர் துறையில் காலியாக உள்ள முத்திரைக் கொல்லர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு டிசம்பர் 2-ஆம் தேதி காலை 10 மணியிலிருந்து 12 மணிவரை தஞ்சாவூரில் உள்ள பாரத் காலேஜ் ஆஃப் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தில் நடைபெற உள்ளது. தகுதியின் அடிப்படையில், விண்ணப்பதாரர்களின் முகவரிக்கு அஞ்சல் மூலம் எழுத்து தேர்வுக்கான நுழைவுச்சீட்டு அனுப்பப்பட்டுள்ளது.
நுழைவுச்சீட்டு பெறாத தகுதியுள்ள திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் நேரில் அணுகி, நுழைவுச்சீட்டு நகலைப் பெற்றுக் கொள்ளலாம். 
நுழைவுச் சீட்டு பெற நேரில் வரும் விண்ணப்பதாரர்கள் தங்களது ஏதேனும் ஓர் அடையாள அட்டை நகலுடன் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி  அ அல்லது ஆ பிரிவு அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று வருமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.