பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

மூதாட்டியைத் தாக்கி 13 பவுன் பறிப்பு: 3 பேர் கைது

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைத் தாக்கி, 13 பவுன் நகையைப் பறித்துச் சென்ற வழக்கில், 3 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

Published On :

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைத் தாக்கி, 13 பவுன் நகையைப் பறித்துச் சென்ற வழக்கில், 3 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
கண்டிதம்பேட்டை கீழத்தெருவைச் சேர்ந்த முருகையன் மனைவி சரோஜா (70). முருகையன் இறந்துவிட்டார். இவர்களது 3 மகன்கள் மற்றும் மகள் திருமணமாகி வெளிநாட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். சரோஜா மட்டும் கண்டிதம்பேட்டையில் உள்ள பூர்வீக வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த அக். 27-ஆம் தேதி சரோஜா வீட்டுக்கு காரில் வந்த மூவர், அவரை உருட்டுக்கட்டையால் தாக்கி, அவர் அணிந்திருந்த சங்கிலி, மோதிரம், வளையல் உள்ளிட்ட 13 பவுன் நகைகளைத் திருடிக்கொண்டு தப்பியோடினர்.
இதுதொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி, கண்டிதம்பேட்டை கீழத்தெருவைச் சேர்ந்த ப.திருமுருகனை (33) கைது செய்தனர். விசாரணையில், ஏற்கெனவே திருட்டு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது, அங்கு அறிமுகமான மன்னார்குடி கீழப்பாலம் அ. எக்பர்ட் (43), தூத்துக்குடி வள்ளிவிளையைச் சேர்ந்த ரா. வேல்முருகன் (26) ஆகியோருடன் சேர்ந்து, சரோஜாவை தாக்கி நகைகளை திருடியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, மூவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 13 பவுன் நகையையும், சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட வேல்முருகனுக்குச் சொந்தமான காரையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.