
திருத்துறைப்பூண்டியில் 24 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியில் 24 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியில் 24 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருத்துறைப்பூண்டியின் நகர பகுதியில் 13 இடங்களிலும், ஊரகப் பகுதியின் 11 இடங்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தினசரி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இந்த சிலைகள் வரும் 17- ஆம் தேதி, பிறவி மருந்தீஸ்வரர் கோயில் அருகே ஒருங்கிணைக்கப்பட்டு, முள்ளியாற்றில் கரைக்கப்படுகின்றன. நிகழ்ச்சியில், பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவர் பேட்டை சிவா, இந்து முன்னணி மாநில நிர்வாகி பாஸ்கர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் இலசுமணி, ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






