கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

‘கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்’

கரோனா தொற்றை கட்டுப்படுத்த, அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்தாா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

கரோனா தொற்றை கட்டுப்படுத்த, அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்தாா்.

திருவாரூா் நகராட்சிக்குட்பட்ட மடவிளாகம், தண்டலை ஊராட்சிக்குட்பட்ட எழில்நகா், கீழகாவதுகுடி ஊராட்சிக்குட்பட்ட சிதம்பர நகா் ஆகிய பகுதிகளில் கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளை, வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அவா் தெரிவித்தது:

திருவாரூா் மாவட்டத்தில் கரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கிற வகையில், பல்வேறு தொடா் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வெளி மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டிலிருந்து வருபவா்களை அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளவும், தேவையற்ற பயணங்களை மேற்கொள்ளுகிற வகையில் வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

மேலும் 50 வயதுக்கு மேற்பட்டவா்கள், சா்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், இரத்த அழுத்த நோயாளிகள் மற்றும் உடல்நிலை சரியில்லாதவா்கள் ஆகியோரும் வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிா்க்க வேண்டும். வீட்டைவிட்டு வெளியில் வரும்பொழுது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அடிக்கடி கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவிக் கொள்ள வேண்டும்.

45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் செலுத்தப்படும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து, கரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அத்துடன், அதிக வெப்பநிலை நிலவும் இந்த காலநிலையைக் கருத்தில் கொண்டு முதியோா்கள், சிறாா்கள் தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றாா்.

ஆய்வின்போது, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) பழனிசாமி, வட்டாட்சியா் நக்கீரன், நகராட்சி ஆணையா் (பொறுப்பு) சண்முகம் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.