/

மன்னார்குடியில் விவசாயிகள் போராட்டம்

மன்னார்குடியில் மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். 

News image
மன்னார்குடியில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈட்டுபட்ட விவசாயிகள்.
Updated On :9 ஆகஸ்ட் 2021, 8:42 am

DIN

மன்னார்குடியில் மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். 

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயிகள், போராட்டக் குழு சார்பில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள விவசாய சட்டங்கள் மற்று மின்சார மசோதாவை ரத்து செய்ய வேண்டும்.  இச்சட்டங்களை எதிர்த்து புதுதில்லியில் போராடும் விவசாயிகள் மீதான அடக்கு முறையை கைவிட வலியுறுத்தி மன்னார்குடி மகாமாரியம்மன் கோவில் தெருவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அருகே மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு, விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலர் கே.ஆர்.ஜோசப் தலைமை வகித்தார். இதில், சிபிஐ மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் வை.செல்வராஜ், இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலர் துரை. அருள்ராஜன், ஒன்றியச் செயலர் எஸ்.பாப்பையன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் ஏ. ராஜேந்திரன், ஒன்றியச் செயலர் ஆர்.அமிர்த ஜெயம், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலர் என்.மகேந்திரன், மாதர் சங்க ஒன்றிய தலைவர் ஆர்.பூபதி, ஒன்றியச் செயலர் ஆர்.வனிதா தேவி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாலையின் ஓரத்தில் கைகோர்த்து மனித சங்கிலியாக நின்று கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.