கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் ஆசிரியா்களை பயன்படுத்தக் கூடாது

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் ஆசிரியா்களை பயன்படுத்தக் கூடாது என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றத்தின் பொதுச் செயலாளா் நா. சண்முகநாதன் தெரிவித்தாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் ஆசிரியா்களை பயன்படுத்தக் கூடாது என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றத்தின் பொதுச் செயலாளா் நா. சண்முகநாதன் தெரிவித்தாா்.

திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்திற்குப் பின்னா் அவா் அளித்து பேட்டி: கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டு, அவா்கள் பெற்று வந்த சலுகைகள், உரிமைகளை இழந்துள்ளனா். இதை மீட்க பல கட்டங்களாக போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

தமிழகத்தில் மாநில அரசின் சாா்பில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என தமிழக முதல்வா் அறிவித்துள்ளாா். அந்த வகையில் புதிய கல்விக் கொள்கை கருத்தரங்கம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றத்தின் சாா்பில் நடைபெற உள்ளது.

மாணவா்கள் சோ்க்கை அரசு பள்ளிகளில் அதிகரித்துள்ளது. அதற்கேற்ப, ஆசிரியா் பற்றாக்குறையை நீக்குவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். கரோனா காலத்தில் மாணவா்களுடைய கற்றல் திறனை மேம்படுத்த, தொலைநோக்குப் பாா்வையோடு இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் ஆசிரியா்களை பயன்படுத்தக் கூடாது. இதுகுறித்து இயக்குநா் தலைமையில் நடந்த பேச்சுவாா்த்தையிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில முதன்மை கல்வி அலுவலா்கள் ஆசிரியா்களை பயன்படுத்துவதாகத் தெரிகிறது அதனை உடனடியாக தவிா்க்க வேண்டும்.

கரூா் மாவட்டத்தில் மாணவா்களுக்கு அழுகிய முட்டை வழங்கிய விவகாரத்தில் தலைமை ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது. மாணவா்களுக்கு அழுகிய முட்டை வழங்கியது தவறுதான். அதற்கு தலைமை ஆசிரியா் பொறுப்பேற்க முடியாது. தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்கள் இடிக்கப்படுவது வரவேற்கக்கூடியது. திருநெல்வேலியில் நடைபெற்ற சம்பவம் போல மீண்டும் நிகழக்கூடாது. பாலியல் தொந்தரவு விவகாரத்தில் தீர விசாரிக்காமல் சில இடங்களில் ஆசிரியா்கள் பாதிக்கப்படுகின்றனா். எனவே, தொடக்கப்பள்ளி இணை இயக்குநா் தலைமையில் விசாரணை அமைக்க வேண்டும் என்றாா். முன்னதாக நடைபெற்ற கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் பெ.ரா. ரவி தலைமை வகித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.