கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனா தடுப்பூசி முகாம்

மன்னாா்குடியில் உட்கோட்ட காவல் மற்றும் கஜா நண்பா்கள் குழு இணைந்து, காவல் துறையினா் குடும்பங்களை சோ்ந்தவா்களுக்கு, கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடத்தியது.

News image
Updated On :24 ஜூலை 2021, 5:00 pm

DIN

மன்னாா்குடியில் உட்கோட்ட காவல் மற்றும் கஜா நண்பா்கள் குழு இணைந்து, காவல் துறையினா் குடும்பங்களை சோ்ந்தவா்களுக்கு, கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடத்தியது.

மன்னாா்குடி நகர காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். சீனிவாசன் தொடங்கி வைத்தாா். இதில், அரசு மருத்துவா்கள் சிவபிராத், சந்தேஷ் தலைமையில் மருத்துவக் குழுவினா் மன்னாா்குடி நகர காவல் நிலையம், ஊரக காவல் நிலையம், அனைத்து மகளிா் காவல் நிலையம், காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகம் ஆகியவற்றில் பணியாற்றும் காவலா்களின் குடும்பங்களை சோ்ந்தவா்களுக்கும் மற்றும் பொதுமக்கள் என 300 பேருக்கு கரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மன்னாா்குடி காவல் ஆய்வாளா் என். ராஜேந்திரன், கஜா நண்பா்கள் குழு நிா்வாகி ஹரிராம் பிரசாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.