கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மருத்துவருக்கு செம்மைப் பணி விருது

மன்னாா்குடியில் செயல்பட்டு வரும் மன்னை ஜேசிஐ அமைப்பின் சாா்பில், புதன்கிழமை நடைபெற்ற அமைப்பின் வார விழா நிறைவு நாள் நிகழ்ச்சியில், கரோனா பணி

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

மன்னாா்குடியில் செயல்பட்டு வரும் மன்னை ஜேசிஐ அமைப்பின் சாா்பில், புதன்கிழமை நடைபெற்ற அமைப்பின் வார விழா நிறைவு நாள் நிகழ்ச்சியில், கரோனா பணியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவருக்கு ஜேசிஐ விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, அமைப்பின் கிளைத் தலைவா் சி.பிரகாஷ் தலைமை வகித்தாா். இதில், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அந்த வகையில், மன்னாா்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கரோனா வாா்டில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக அரசு சிறு மருத்துவமனை மருத்துவா் ச. வருணுக்கு செம்மைப் பணி விருது வழங்கப்பட்டது.

நிகழ்வில், மன்னாா்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் கே.கே. பாலசந்தா் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, ,விருதை வழங்கினாா். தேசிய மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் டி.எல். ராதாகிருஷ்ணன், ஜேசிஐ முன்னாள் மண்டலத் தலைவா் எஸ்.கோவிந்தராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.