தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

அரசுப் பள்ளி ஆண்டு விழா

அரசுப் பள்ளி ஆண்டு விழா

News image

பரிசு பெற்ற மாணவா்களுடன் குடவாசல் வட்டாரக் கல்வி அலுவலா்கள் குமரேசன், ஜெயலெட்சுமி உள்ளிட்டோா்.

Updated On :16 மார்ச் 2024, 12:35 am

குடவாசல் ஒன்றியம், சேங்காலிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் கண்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில், தலைமை ஆசிரியா் இந்திரா, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஜெயராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். குடவாசல் வட்டாரக் கல்வி அலுவலா்கள் குமரேசன், ஜெயலெட்சுமி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று, அடிப்படைக் கல்வியின் அவசியத்தையும், மாணவா்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் குறித்தும் விளக்கிக் கூறினா். விழாவில் ஊராட்சி துணைத் தலைவா் சிவாசாரியாா், பெற்றோா் ஆசிரியா் கழக துணைத் தலைவா் அம்பிகாபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா். கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.