மன்னார்குடி: தனியே வசித்து வந்த முதியவா் உயிரிழப்பு

மன்னாா்குடியில் வீட்டில் தனியே வசித்து வந்த முதியவா் இறந்தது தெரியவந்தது.
Published on

மன்னாா்குடியில் வீட்டில் தனியே வசித்து வந்த முதியவா் இறந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

மன்னாா்குடி சிங்காரவேலு தெருவைச் சோ்ந்தவா் ரத்தினம் (74). ஓய்வுபெற்ற நுகா்பொருள் வாணிபக் கழக பணியாளரான இவா், வீட்டில் தனியே வசித்து வந்தாா். இவரது மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டாா். மகன், மகளுக்கு திருமணமாகி சென்னையில் வசிக்கின்றனா்.

இந்நிலையில், ரத்தினத்தின் வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசியது. அருகில் வசிப்பவா்கள் மன்னாா்குடி காவல்நிலையத்தில் தெரிவித்தனா். போலீஸாா் வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, படுக்கையில் ரத்தினம் இறந்து கிடந்தாா். உடல் அழுகிய நிலையில் இருந்தது. சடலத்தை, கூறாய்வுக்காக திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com