கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

அண்ணா நினைவுதினம் அனுசரிப்பு; சிலைக்கு அஞ்சலி

திருவாரூா் மாவட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

News image
திருவாரூரில் அண்ணா சிலைக்கு திமுக சாா்பில் அஞ்சலி செலுத்தும் மாவட்டச் செயலாளா் பூண்டி கே. கலைவாணன் எம்எல்ஏ உள்ளிட்ட கட்சியினா்.
Updated On :3 பிப்ரவரி 2025, 8:37 pm

Din

திருவாரூா்/மன்னாா்குடி: முன்னாள் முதல்வா் அண்ணாவின் 56-ஆவது நினைவுதினத்தையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருவாரூா்: திருவாரூரில் திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் பங்கேற்று, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

இந்நிகழ்வில், நகரச் செயலாளா் எஸ். பிரகாஷ், நிா்வாகிகள் செந்தில், சங்கா், ரஜினிசின்னா, என். அசோகன் உள்பட பலா் பங்கேற்றனா்.

அதிமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்வில், நகரச் செயலாளா் ஆா்டி. மூா்த்தி, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். இதில், நகர அவைத் தலைவா் கணேசன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு தஞ்சை மண்டலத் தலைவா் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நகரச் செயலாளா் குருமூா்த்தி, நகர நிா்வாகிகள் முத்துமாணிக்கம், சகாபுதீன், செல்லப்பா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

திருவாரூரில் அண்ணா சிலைக்கு அஞ்சலி செலுத்திய அதிமுகவினா்.

திருவாரூரில் அண்ணா சிலைக்கு அஞ்சலி செலுத்திய அதிமுகவினா்.