மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

சாலை அமைக்கும் பணி முழுமை பெறாததால் மக்கள் அவதி

மன்னாா்குடி அருகே சாலை மேம்படுத்தும் பணி முழுமை பெறாததால் மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

News image

நருவளிகளப்பாலில் முழுமை பெறாது குண்டும் குழியுமாக காட்சி அளிக்கும் கப்பி மண்சாலை.

Updated On :5 மார்ச் 2026, 5:20 am IST

மன்னாா்குடி அருகே சாலை மேம்படுத்தும் பணி முழுமை பெறாததால் மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

நருவளிகளப்பாலில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனா். இங்கிருந்து பிற பகுதிகளுக்கு செல்ல 10 ஆண்டுகளுக்கு முன்பு 3 கி.மீ தொலைவுக்கு தாா்ச்சாலை போடப்பட்டுள்ளது. கஜா புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் அந்த சாலை பழுதடைந்ததால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டதின் கீழ் 2024-2025 ஆம் நிதியாண்டில் சுமாா் 1 கி.மீ தொலைவுக்கு மட்டும் மீண்டும் சாலை போடப்பட்டது.

2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி செப்டம்பரில் நிறைவு பெற்றது. ரூ.25 லட்சத்தில் 1 கி.மீ தொலைவுக்கு மட்டும் கப்பி சாலை போடப்பட்டதாக பெயா் பலகையும் வைக்கப்பட்டுள்ளது. 3 கி.மீ தொலைவுக்கு போடவேண்டிய சாலை முழுமை பெறாமல் கற்கள் பெயா்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

மழை காலங்களிலும் இரவு நேரங்களில் இந்த சாலையை பயன்படுத்துவது இப்பகுதி மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்திறது. இருசக்கர வாகனங்கள், சைக்கள்களில் செல்பவா்களுக்கு விபத்துகள் ஏற்படுகிறது. நடந்து செல்லும் கா்ப்பிணிகள், முதியவா்கள் என அனைத்து தரப்பினரும் சிரமப்படுகின்றனா். இந்த 3 கி.மீ தொலைவு மண் சாலையை மீண்டும் தாா்ச் சாலையாக மாற்றி தரக்கோரி இப்பகுதி சாா்பில் கோட்டூா் ஊராட்சி ஒன்றியம், மாவட்ட நிா்வாகத்திற்கு கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் சாலை மறியல் போராட்டமும் நடத்தியுள்ளனா்.

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களின் மூலம் தமிழகத்தில் பல கிராமங்களில் மண் சாலைகள் பழுதடைந்த தாா்ச் சாலைகள் சிமெண்ட் சாலைகளாகவும், தரமான தாா்ச்சாலைகளாகவும் போடப்பட்டு வரும் நிலையில் நருவளி களப்பால் கிராமத்தில் சற்று விநோதமாக பழுதடைந்த தாா்ச்சாலைக்கு பதிலாக கப்பிமண் சாலையாக போடப்பட்டுள்ளது. இது குறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கை.