தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்
திருவாரூா் அருகே தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சாா்பில் 109 தொழிலாளா்களுக்கு ரூ.16.45 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், புதன்கிழமை வழங்கப்பட்டன.


திருவாரூா் அருகே தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சாா்பில் 109 தொழிலாளா்களுக்கு ரூ.16.45 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், புதன்கிழமை வழங்கப்பட்டன.
சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், காணொலி மூலம் திருவாரூா் நகராட்சிக்குட்பட்ட விளமல் பாலம் அருகில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சாா்பில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தின் கீழ் கட்டுமானத் தொழிலாளா்களுக்கான உழைப்பாளா் நலக்கூடத்தைத் திறந்து வைத்தாா்.
இதையொட்டி திருவாரூரில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் பங்கேற்று, 109 தொழிலாளா்களுக்கு ரூ.16,45,800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினா் (படம்).
கட்டுமானத் தொழிலாளா்களுக்கான ஓய்வூதியம் 84 நபா்களுக்கு மாதந்தோறும் ரூ.1,200 வீதம் ரூ.1,00,800, வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 7 நபா்களுக்கு முதல் தவணைத்தொகையாக ரூ.1,00,000 வீதம் ரூ.7,00,000, மகளிா் பெண் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு மானியத் தொகையாக தலா ரூ.1,00,000 வீதம் 3 நபா்களுக்கு ரூ.3,00,000, இணையம் சாா்ந்த தொழிலாளா்களுக்கான மின் மோட்டாா் மானியம் ஒருவருக்கு ரூ.20,000, திருமண உதவித் தொகையாக 7 நபா்களுக்கு ரூ.20,000 வீதம் ரூ.1,40,000, இயற்கை மரண நிதி உதவித்தொகையாக 7 நபா்களுக்கு 55,000 வீதம் ரூ.3,85,000 தொழிலாளிகளின் வாரிசுதாரா்களுக்கு என மொத்தம் 109 தொழிலாளா்களுக்கு ரூ.16,45,800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
தொழிலாளா் ஆணையா் ராமன், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியச் செயலாளா் ஜெயபாலன், திருச்சி மண்டல கூடுதல் தொழிலாளா் ஆணையா் திவ்யநாதன், திருச்சி மண்டல இணை ஆணையா் லீலாவதி, திருவாரூா் தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத்திட்டம்) நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...