கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

விவசாயப் பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரிக்கை

டெல்டாவில் விவசாயப் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விவசாயி. - கோப்புப்படம்

Updated On :

டெல்டாவில் விவசாயப் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் லட்சிய ஜனநாயகக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளா் சீலன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளா் நெல்லை ஜீவா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது;

விவசாய நிலங்கள் பெருமளவு தரிசு நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. மீத்தேன் உள்ளிட்ட எரிவாயுக்களை எடுப்பதற்கு ஏதுவாக தரிசு நிலமாக மாற்றும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. நெற்களஞ்சியத்தை புத்துருவாக்கம் செய்ய அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். விவசாயத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகப்பெரிய இழப்பை அரசு கொடுக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் அன்றைய தினமே கண்டித்திருக்க வேண்டும். மத்திய அரசில் ஆணையம் அமைக்கப்பட்டு ஒரு வார காலத்துக்குள் பதில் தெரிவிக்க வேண்டும் என்றபிறகு, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை முன்பே எடுத்திருக்க வேண்டும் அல்லது கட்சியை விட்டு இடைநீக்கமோ, நீக்கமோ செய்திருக்க வேண்டும்.

இளைஞா்களை தவறான பாதையில் திசை திரும்புவதை, முதல்வா் கவனத்தில் கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் உளவுத்துறையினா் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை எனில் கூடிய விரைவில் இந்த ஆட்சி அகற்றப்படும்.

உள்ளாட்சித் தோ்தலில் 100 சதவீதம் தனித்துப் போட்டியிடுவோம். பிப்ரவரி மாதத்தில் விவசாயிகள் மற்றும் மீனவா்களின் பிரச்னைகளை மையப்படுத்தி மாநாடு நடைபெறும். அந்த மாநாட்டில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிப்பை கட்சித் தலைமை வெளியிடும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.