தெற்கு தில்லி சரோஜினி நகரில் உள்ள பெரும் வணிக வளாகத்தில் மின்சாரம் பாய்ந்ததில் எலக்ட்ரீஷியன் ஒருவர் உயிரிழந்தார்.
இது குறித்து போலீஸார் வியாழக்கிழமை கூறியதாவது: உத்தர பிரதேச மாநிலம், அம்ரோஹ் பகுதியைச் சேர்ந்த சர்வார் அலி. எலக்ட்ரீஷியனான அவர், சம்பவத்தன்று தெற்கு தில்லி, சரோஜினி நகரில் உள்ள அந்த வணிக வளாகத்தில் ஏசி சாதனத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் மீது திடீரென மின்சாரம் பாய்ந்தது. இதைத் தொடர்ந்து, அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது சடலம் பிரதே பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காமன்வெல்த்: அரையிறுதிக்கு முன்னேறிய தமிழன் விஷால் தென்னரசு கயல்விழி!

18 வகை உணவுகளைத் தானியங்கியாக சமைக்கும் மைக்ரோவேவ் ஓவன்!

ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பாடலை வெளியிடும் ஜி.வி. பிரகாஷ்!
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்... ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!
விடியோக்கள்
கண்ணதாசன் கவிஞரான கதை| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -2


