சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வில் அறிவியல் பிரிவில் தில்லி அரசுப் பள்ளிகள் அளவில் முதலிடம் பெற்ற தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் (டிடிசி) ஓட்டுநர் மகன் பிரின்ஸ் குமாருக்கு டிடிசி சார்பில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது.
தில்லி போக்குவரத்து நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருபவர் மனோஜ் குமார். இவரது மகன் பிரின்ஸ் குமார். இவர், சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வில் 97 சதவீத மதிப்பெண்கள் பெற்று, அரசுப் பள்ளிகள் அளவில் அறிவியல் பிரிவில் முதலிடம் பெற்றார்.
இதைத் தொடர்ந்து, தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் சார்பில் வியாழக்கிழமை பிரின்ஸ் குமாருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில், மாணவர் பிரின்ஸுக்கு டிடிசி மேலாண்மை இயக்குநர் பாராட்டு கடிதத்தை வழங்கினார். மேலும், மாணவருக்கும் அவரது பெற்றோருக்கும் வாழ்த்துத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது, கடந்த மாதம் சில விஷமிகளிடமிருந்து முதியவரின் உயிரைக் காப்பாற்றியதற்காக டிடிசி ஓட்டுநர் சுரீந்தர், நடத்துநர் மன்ஜீத் சிங் ஆகியோர் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மேலும் 150 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு: கே.ஜி. அருண்ராஜ்
இதுதான் ஆய்வு! ஆட்டுக்கறி குழம்பில் கறி எங்கே? மாணவர் விடுதியில் ஆட்சியர் கேள்வி!






