தில்லியில் உள்ள அக்பர் சாலையில் புதன்கிழமை மர்ம நபர்கள் "மகாரானா பிரதாப் சாலை' என்ற பெயர்ப் பலகையை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இப்பலகையை தில்லி காவல் துறையினர் உடனடியாக அகற்றினர்.
தில்லியில் முக்கிய அரசியல் தலைவர்கள், காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் உள்ளிட்டவை அக்பர் சாலையில் அமைந்துள்ளன. முகலாயர் மன்னர் அக்பரின் பெயரில் இந்தச் சாலை உள்ளது.
இந்நிலையில், ராஜ்புத் மன்னரான மகாரானா பிரதாப்பின் பிறந்த தினம் புதன்கிழமை தில்லியில் கொண்டாடப்பட்டது. இதனிடையே, அவரது பெயர் தாங்கிய பெயர் பலகையை விஷமிகள் அக்பர் சாலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் வைத்துவிட்டுச் சென்றனர். "மகாரானா பிரதாப் சாலை' என்று பெயரிடப்பட்ட அந்த பெயர்ப் பலகை குறித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின. இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த சர்ச்சைக்குரிய பெயர்ப் பலகையை அகற்றினர். மேலும், இந்த விஷமச் செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருவதாக போலீஸார் கூறினர்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற அரசராக விளங்கிய மகாரானா பிராதப், 1576-இல் முகலாய மன்னர் அக்பருடன் போரிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தில்லியில் அக்பரின் கொள்ளுப் பேரன் ஒளரங்கசீப் பெயரில் இருந்த சாலையை "டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் சாலை' என புது தில்லி முனிசிபல் கவுன்சில் கடந்த 2015-இல்பெயர் மாற்றம் செய்தது. முன்னாள் குடியரசுத் தலைவரான கலாமின் பெயர் அவரது மறைவுக்குப் பிறகு இந்தச் சாலைக்குச் சூட்டப்பட்டது.
அதே ஆண்டில் மத்திய அமைச்சர் வி.கே. சிங் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில், அக்பர் சாலை அல்லது தில்லி லுட்யான்ஸில் உள்ள ஏதாவது ஒரு சாலைக்கு மகாரானா பிரதாப்பின் பெயர் வைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது, மத்திய அமைச்சராக இருந்த எம்.வெங்கய்ய நாயுடு, இது போன்ற முன்மொழிவுகளில் அரசின் தலையீடு இல்லை என்று தெரிவித்திருந்தார். மேலும், அரசின் நோக்கம் வளர்ச்சி தானே தவிர, சாலைகளின் பெயரை மாற்றுவதிலோ, பெயர் வைப்பதிலோ இல்லை என்றார்.
அதற்கு அடுத்த ஆண்டில் பிரதமரின்அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் சாலையின் பெயர் லோக் கல்யாண் மார்க் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடலூரில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்: பயிா்க்கடன்களை முழு தள்ளுபடி செய்யக் கோரிக்கை
அணையா தீபம் இந்திய ஜனநாயகம்

மேக்கேதாட்டு அணை பிரச்னை: அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

ரூ.7.15 லட்சம் புகையிலைப் பொருள்கள் கடத்தல்: 3 போ் கைது
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju


