ஊழல்களை வெளிப்படுத்துபவர்கள் மீது தாக்குதல்: கபில் மிஷ்ரா புகார்

தில்லி அரசின் ஊழல்களை வெளிப்படுத்துபவர்கள் மீது சமூக வலைத் தளங்களில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுவதாக ஆம் ஆத்மி அதிருப்தி எம்எல்ஏ கபில் மிஷ்ரா குற்றம் சாட்டியுள்ளார். 

Published On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

தில்லி அரசின் ஊழல்களை வெளிப்படுத்துபவர்கள் மீது சமூக வலைத் தளங்களில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுவதாக ஆம் ஆத்மி அதிருப்தி எம்எல்ஏ கபில் மிஷ்ரா குற்றம் சாட்டியுள்ளார். 
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது: தில்லி அரசின் தவறுகள், முதல்வர் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோரின் ஊழல்கள், அவர்கள் கூறும் பொய்கள் ஆகியவற்றை வெளிப்படுத்துபவர்கள் மீது ஆம் ஆத்மித் தொண்டர்களால் சமூக வலைத் தளங்களில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்படுகிறது. மேலும், ஊழல்களை வெளிப்படுத்துபவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மீதும் குறிப்பாக அவர்களின் சகோதரிகள், தாய் உள்ளிட்ட பெண் உறுப்பினர்கள் மீது அருவருக்கத்தக்க வகையில் தாக்குதல் நடத்தப்படுகிறது. 
தற்போது காஷ்மீர் மாநிலம் கதூவா பகுதியில் சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கேஜரிவால் கூறிய பொய்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த விகாஷ் பாண்டே என்னும் இளைஞர் மீதும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் மீதும் ஆம் ஆத்மி கட்சியினர் திட்டமிட்டு சமூக வலைத் தளங்களில் தாக்குதல் நடத்துவதை கவனிக்கக் கூடியதாத உள்ளது.  
இந்த சமூக வலைத் தளங்களில் அவதூறு செலுத்துவதற்காக ஊதியம் வழங்கி ஒரு குழுவையே ஆம் ஆத்மி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தாக்குதல்களுக்கு முதல்வரும், துணை முதல்வரும் பொருப்பேற்க வேண்டும். இது போன்று திட்டமிட்டு சமூக வலைத் தளங்களில் தாக்குதல் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.