2022-க்குள் 1.75 லட்சம் மெகா வாட் புதுப்பிக்கவல்ல எரிசக்தி உற்பத்தி: மத்திய அரசு திட்டம்

வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் 1.75 லட்சம் மெகா வாட் புதுப்பிக்கவல்ல எரிசக்தியை உற்பத்தி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் 1.75 லட்சம் மெகா வாட் புதுப்பிக்கவல்ல எரிசக்தியை உற்பத்தி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகத்தின் உயரதிகாரி புதன்கிழமை தெரிவித்ததாவது: வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் 1.75 லட்சம் மெகாவாட் அளவுக்கு 
புதுப்பிக்கவல்ல எரிசக்தி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். தற்போது 70 ஆயிரம் மெகா வாட் உற்பத்தி செய்யப்படுகிறது.
 நிகழாண்டு மார்ச் 31-க்குள் 38 ஆயிரம் மெகாவாட் புதுப்பிக்கவல்ல எரிசக்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதனால், கடந்த ஆண்டு முடிவில் புதுப்பிக்கவல்ல எரிசக்தி உற்பத்தி அளவு 1.08 லட்சம் மெகா வாட்டாக இருந்தது. 
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கவல்ல எரிசக்தி கொள்திறன் அளவைவிட 2 மடங்கு அதிகரித்து தற்போது 70 ஜிகா வாட்டாக உள்ளது. புதுப்பிக்கவல்ல எரிசக்தி கொள்திறன் 2017-18-இல் 11,788 மெகா வாட் கூடுதலாக்கப்பட்டது. 
ஒரே ஆண்டில் இதுதான் அதிகபட்ச கூடுதலாகும். 2017-18-இல் முதல் தடவையாக ஒரே ஆண்டில் 100 பில்லியன் யூனிட் புதுப்பிக்கவல்ல எரிசக்தி உற்பத்தி செய்யப்பட்டது. அதேபோன்று, 22 ஜிகா வாட் சூரிய மின்சக்தி கொள்திறன் இலக்கு எட்டப்பட்டுள்ளது. இது 2022-ஆம் ஆண்டுக்குள் எட்டுவதற்காக 2010-இல் நிர்ணயிக்கப்பட்டதாகும் . அதேபோன்று, கடந்த ஆண்டில் 56 ஆயிரம் சூரிய மின்சக்தி பம்புகள் நிறுவப்பட்டன. ஒரே ஆண்டில் இந்த அளவு எண்ணிக்கையில் இதற்கு முன்பு நிறுவப்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.