தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

தயார் நிலையில் ஜனக்புரி மேற்கு - கால்காஜி மந்திர் மெட்ரோ ரயில் வழித்தடம்

தில்லியில் ஜனக்புரி மேற்கு- கால்காஜி மந்திர் இடையேயான மெட்ரோ ரயில் வழித்தடம் (மெஜந்தா) வரும் மே 28-ம் தேதி திறக்கப்படவுள்ளது.

Updated On :24 மே 2018, 11:48 pm IST

தில்லியில் ஜனக்புரி மேற்கு- கால்காஜி மந்திர் இடையேயான மெட்ரோ ரயில் வழித்தடம் (மெஜந்தா) வரும் மே 28-ம் தேதி திறக்கப்படவுள்ளது.
தில்லியில் ஏற்கெனவே இரண்டு கட்டங்களாக மெட்ரோ ரயில்வே திட்டப் பணிகள் நடைபெற்று முடிவடைந்தன. இதையடுத்து, தலைநகரின் பல்வேறு பகுதிகளுக்கும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது, மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில்வே திட்டப் பணிகள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, ஜனக்புரி மேற்கு மற்றும் கால்காஜி மந்திர் இடையேயான 24.82 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் அளித்துள்ளதைத் தொடர்ந்து, புதிய மெட்ரோ வழித்தடம் திறக்கப்படவுள்ளது. அதன் பிறகு, இந்த வழித்தடத்தில் பயணிகள் ரயில் சேவை மே 29-ஆம் தேதி காலை 6 மணி முதல் தொடங்கும்.
மூன்றாவது கட்ட மெட்ரோ ரயில்வே திட்டத்தில் புறவழிச்சாலையை முழுவதையும் சென்றடையும் வகையில் 38.2 கிலோமீட்டர் தூரத்துக்கு ஜனக்புரி மேற்கு - பொட்டானிகல் கார்டன் (மெஜந்தா) வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் ஜனக்புரி மேற்கு- கால்காஜி மந்திர் இடையிலான மெட்ரோ வழித்தடத்தில், ஜனக்புரி மேற்கு, டாப்ரி மோர், பாலம், தசரத்புரி, சதர் பஜார், டெர்மினல் 1 - ஐஜிஐ ஏர்போர்ட், சங்கர் விஹார், வசந்த் விஹார், முனிர்கா, ஆர்.கே. புரம், ஹோஸ் காஸ், ஐஐடி, பஞ்ச்சீல் பார்க், சிராக் தில்லி, ஜி.கே. என்கிளேவ், நேரு என்கிளேவ் ஆகிய 16 ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன.
மொத்தமுள்ள 24.82 கிலோ மீட்டர் வழித்தடத்தில், 21.8 கிலோ மீட்டர் ரயில் பாதை பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய வழித்தடம் நிலப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
சதர் பஜார், சங்கர் விஹார் ரயில் நிலையங்கள் மட்டுமே மேம்பால ரயில் நிலையங்களாகும். இந்த வழித்தடத்தில் ஜனக்புரி மேற்கு மற்றும் ஹோஸ் காஸ் பகுதியில் இடைமாறிச் செல்லும் மெட்ரோ சந்திப்புகள் அமைந்துள்ளன.
மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில்வே திட்டப் பணியில், சென்ட்ரல் செக்ரட்டேரியட் - கஷ்மீரி கேட் (9.37 கிமீ), பதர்பூர் - எஸ்கார்ட்ஸ் முஜேஸர் (13.98 கிமீ), ஜஹாங்கீர் புரி - சமய்பூர்பதலி (4.49 கிமீ), துர்காபாய் தேஷ்முக் தெற்கு வளாகம் - மஜ்லிஸ் பார்க் (21.56 கிமீ), பொட்டானிக்கல் கார்டன் - கால்காஜி மந்திர் (12.64 கிமீ) ஆகிய வழித்தடங்கள் ஏற்கெனவே மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுவிட்டன.
மேலும், துர்காபாய் தேஷ்முக் தெற்கு வளாகம் - ஷிவ் விஹார் ( 37.04 கிமீ), முண்ட்கா - பகர்துர்கர் (11.82கிமீ), நொய்டா சிட்டி சென்டர் - எலக்ட்ரானிக் சிட்டி (6.8 கிமீ), துவாரகா - நஜஃப்கர் (4.30 கிமீ), எஸ்கார்ட்ஸ் முஜேஸர் - பல்லாப்கர் (3.2 கிமீ), தில்ஸாத் கார்டன் - புதிய பேருந்து நிலையம் (9.41 கி.மீ.) ஆகிய வழித்தடங்கள் மட்டும் இனிமேல்தான் திறக்கப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.