ரூ.4.50 லட்சத்தை கொள்ளையடிக்க நண்பனைக் கொன்றவர் கைது

வங்கியில் செலுத்த ரூ. 4.50 லட்சம் கொண்டு சென்ற தீபக் குமாரை கொலை செய்ததாக அவரது நண்பன் சிவம் உள்பட 4 பேரை தில்லி போலீஸார்

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

வங்கியில் செலுத்த ரூ. 4.50 லட்சம் கொண்டு சென்ற தீபக் குமாரை கொலை செய்ததாக அவரது நண்பன் சிவம் உள்பட 4 பேரை தில்லி போலீஸார் கைது செய்தனர். தீபக்கிடம் இருந்த பணத்தைக் கொள்ளையடிக்க தீபக்கை கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தில்லி காவல் துறையினர் கூறியதாவது: தென்கிழக்கு தில்லி, மதன்பூர் காடர் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் குமார் (23). இவர் அப்பகுதியில் பால் பண்ணை நடத்தி வரும் தனது தந்தைக்கு உதவியாக இருந்து வந்தார்.  கடந்த திங்கள்கிழமை இவர் தனது பண்ணையில் வசூலான பணம் ரூ.4.50 லட்சத்தை வங்கியில் செலுத்துவதற்காக சென்றார். ஆனால், அதன் பிறகு அவர் திரும்பி வரவில்லை.  
இதையடுத்து, அவரது பெற்றோர் ஜெய்த்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், சம்பவத்தன்று தீபக் தனது நண்பர் சிவம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றதாக தெரிவித்தனர். இதையடுத்து, காவல் ஆய்வாளர் சஞ்சய் சின்ஹா தலைமையிலான போலீஸார் சிவத்தின் வீட்டுக்குச் சென்று, அவரிடம் விசாரணை நடத்தினர். ஆனால், அவர் போலீஸாரிடம் தவறான தகவல் கூறி திசை திருப்ப முயன்றார். 
எனினும், போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில் தீபக்கை கொலை செய்து கால்வாயில் வீசியதை சிவம் ஒப்புக் கொண்டார். 
இக்கொலையில் சிவத்தின் நண்பர்கள் அஜய், சுமித், முக்கீம் ஆகியோர் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, இக்கொலையில் தொடர்புடைய மற்றவர்களும் கைது செய்யப்பட்டனர். நால்வரும் தீபக்கை கயிறால் கழுத்தை நெரித்துக் கொன்றனர். பின்னர், அவரது சடலத்தை கால்வாயில் வீசீனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாவும் போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து தீபக்கின் பெற்றோர் கூறியதாவது: சில தினங்களுக்கு முன் தீபக்கிடம் திரைப்படம் பார்க்க வருமாறு சிவம் அழைத்தார். அதற்கு பால் பண்ணையில் ஒரு வாரம் வசூலான பணத்தை வங்கியில் செலுத்த வேண்டியிருப்பதாக சிவத்திடம் கூறிய தீபக், திரைப்படத்திற்கு வருவதற்கு மறுத்துவிட்டார். 
இதையடுத்து, வங்கியில் பணத்தை செலுத்த உதவுவதாகவும், அதன்பிறகு திரைப்படத்திற்கு செல்லலாம் என்றும் தீபக்கிடம் சிவம் கூறினார். அவரது பேச்சை நம்பி தீபக் சென்றதால் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.