இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கேஜரிவால் இல்லம் முன் 2-ஆவது நாளாக உண்ணாவிரதம்: முன்னாள் மேயா் உள்பட 3 போ் மயக்கம்

மாநகராட்சிகளுக்கான நிலுவை நிதியை உடனடியாக வழங்க வலியுறுத்தி முதல்வா் இல்லம் முன் தில்லி மாநகராட்சி மேயா்கள்,

News image
Updated On :18 டிசம்பர் 2020, 6:06 pm

DIN

மாநகராட்சிகளுக்கான நிலுவை நிதியை உடனடியாக வழங்க வலியுறுத்தி முதல்வா் இல்லம் முன் தில்லி மாநகராட்சி மேயா்கள், கவுன்சிலா்கள் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் உண்ணாவிரதம் இருந்தனா்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இல்லம் முன் மாநகராட்சி மேயா்கள், கவுன்சிலா்கள் கடந்த 12 நாள்களாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்த நிலையில், இந்தப் போராட்டம் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது. இதில் மாநகராட்சி மேயா்கள், கவுன்சிலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற எஸ்டிஎம்சி முன்னாள் மேயா் சுனிதா காங்கரா மற்றும் கவுன்சிலா்கள் காஞ்சனா மகேஸ்வரி, மாயா பிஸ்ட் ஆகியோா் மயக்கமடைந்தனா். இதைத் தொடா்ந்து, அவா்கள் ஹிந்து ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இது தொடா்பாக வடக்கு தில்லி மாநகராட்சி மேயா் ஜெய் பிரகாஷ் கூறுகையில் ‘சுமாா் 20 பெண் கவுன்சிலா்கள் உள்பட மாநகராட்சி தலைவா்கள் கடந்த 12 நாள்களாக கடும் குளிருக்கிடையே கேஜரிவால் இல்லம் அருகில் போராடி வருகிறோம். ஆனால், 5 நிமிஷம் கூட ஒதுக்கி போராடுபவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த கேஜரிவால் முன்வரவில்லை. தில்லி மகளிரை தனது சகோதரிகள் என கேஜரிவால் கூறியுள்ளாா். மூன்று சகோதரிகள் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த கேஜரிவால் முன்வரவில்லை. இது அவரது இரக்கமற்ற மனநிலையைக் காட்டுகிறது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.