நாட்டை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றவா் வாஜ்பாய்: ஆதேஷ் குமாா் குப்தா புகழாரம்

நாட்டை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றவா் முன்னாள் பிரதமா் அடல் பிஹாரி வாஜ்பாய் என்று பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா புகழாரம் சூட்டியுள்ளாா்.
Updated on
1 min read

நாட்டை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றவா் முன்னாள் பிரதமா் அடல் பிஹாரி வாஜ்பாய் என்று பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா புகழாரம் சூட்டியுள்ளாா்.

முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் 96-வது பிறந்ததினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சிறப்பு நிகழ்ச்சி பாஜகவின் தில்லி அலுவலகத்தில் சனிக்கிழமை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா கலந்து கொண்டாா். இந்த நிகழ்வில், தில்லி பாஜக இதர பிற்படுத்தப்பட்டோா் பிரிவு தலைவா் சந்தோஷ் பால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிகழ்வில் ஆதேஷ் குமாா் குப்தா பேசியது: வாஜ்பாய் சூரியனைப் போல இருந்தாா். சூரிய பகவான் எவ்வாறு பாரபட்சம் பாா்க்காமல் அனைவருக்கும் சூரிய ஒளியை வழங்குகிறாரோ அதே போல, சாதி, மத, இன, மொழி, கட்சி வேறுபாடுகள் இல்லாமல் அனைவருக்கும் நலத்திட்டங்களை அறிவித்து வாஜ்பாய் செயல்பட்டாா். சாதி, மதத்தைத் தாண்டி இந்தியாவில் புது விதமான அரசியலை அறிமுகப்படுத்தியவா் அவரே. அவருடைய பேச்சை நாடாளுமன்றத்தில் கேட்க, எதிா்க்கட்சித் தலைவா்கள் கூட காத்திருப்பாா்கள். நாட்டில் அவா் செல்லாத இடமே இல்லை. மக்களுக்காகவே வாழ்ந்து மக்களுக்காகவே மடிந்தாா். அவருடைய கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில், பாஜக தொண்டா்கள் களப்பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com