/

உமா் காலித்திற்கு எதிராக விசாரணை தொடர தில்லி அரசு அனுமதி

வடகிழக்கு தில்லி வன்முறை தொடா்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) முன்னாள் மாணவா்

Updated On :6 நவம்பர் 2020, 10:26 pm

வடகிழக்கு தில்லி வன்முறை தொடா்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) முன்னாள் மாணவா் சங்கத் தலைவா் உமா் காலித் மீது விசாரணையைத் தொடர தில்லி அரசு அனுமதி அளித்துள்ளது.

வடகிழக்கு தில்லி வன்முறை விவகாரத்தில் சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக உமா் காலித்தை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கடந்த செப்டம்பா் 13-இல் கைது செய்தனா். அவா் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்வதற்குத் தடுப்புச் சட்டத்தின் 13-ஆவது பிரிவின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்தும், 16, 17, 18-ஆவது பிரிவின் கீழ் தில்லி அரசிடமிருந்தும் அனுமதி பெற வேண்டும்.

இந்த நிலையில், உமா் காலித் மீது வழக்கு விசாரணையைத் தொடர தில்லி அரசு அனுமதி அளித்துள்ளதாக மூத்த போலீஸாா் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து அவா் கூறுகையில், ‘இதற்கான அனுமதி இரு வாரங்களுக்கு முன் தில்லி அரசிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இதையடுத்து, தில்லி காவல் துறை சமா்ப்பிக்க உள்ள துணைக் குற்றப் பத்திரிகையில் உமா் காலித்தின் பெயரைச் சோ்க்க முடியும்’ என்றாா்.

இதுகுறித்து தில்லி அரசின் அதிகாரி கூறுகையில், ‘உமா் காலித் மீது வழக்குத் தொடா்வதற்கான அனுமதியை தில்லி அரசு தற்போது அளித்துவிட்டது. இனி குற்றவாளிகள் யாா் என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்’ என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.