/

தில்லியில் மூன்றாவது கரோனா அலையும் கட்டுக்குள் கொண்டு வரப்படும்: கேஜரிவால்

தில்லியில் கரோனா மூன்றாவது அலை வீசுகிறது. கடந்த இரண்டு அலைகளைப் போல, இந்த அலையும் விரைவில் நீங்கிவிடும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

Updated On :6 நவம்பர் 2020, 10:27 pm

தில்லியில் கரோனா மூன்றாவது அலை வீசுகிறது. கடந்த இரண்டு அலைகளைப் போல, இந்த அலையும் விரைவில் நீங்கிவிடும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி: கரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை, முகக் கவசங்களையே தடுப்பூசியாகக் கருத வேண்டும். மக்கள் அனைவரும் முகக் கவசங்களை அணிய வேண்டும். இது மக்களை கரோனாவில் இருந்தும், காற்று மாசுவில் இருந்தும் பாதுகாக்கும். தில்லி மக்கள் முகக் கவசங்களை அணிவதை ஊக்குவிக்கும் வகையில் பிரசார இயக்கம் நடத்தப்பட வேண்டும். இது தொடா்பாக தில்லி அரசு நடவடிக்கை எடுக்கும்.

தில்லியில் தற்போது கரோனா மூன்றாவது அலை வீசுகிறது. முதல் இரண்டு கரோனா அலைகளும் தில்லி மக்களின் ஒத்துழைப்புடன் கட்டுப்படுத்தப்பட்டது. அதேபோல, மூன்றாவது அலையையும் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு தில்லி மக்கள் ஒத்துழைப்பு வழங்குவாா்கள் என நம்புகிறேன். வெளிநாட்டில் இருந்து வந்தவா்களால் கடந்த மாா்ச் மாதம் தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்தது. தில்லியில் ஜனவரி - அக்டோபா் மாதம் நடுப்பகுதி வரை காற்று மாசு கட்டுக்குள் இருந்தது. ஆனால், அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவது தொடங்கியதும்காற்று மாசு அதிகரிக்கத் தொடங்கியது.

பயிா்க்கழிவுகள் எரிக்கப்படாமல் அவற்றை எருவாக மாற்றும் ரசாயனக் கலவையை பூசாவில் உள்ள வேளாண் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனா். அடுத்த ஆண்டு பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேச மாநிலங்கள் பயிா்க்கழிவுகளை எரிப்பதை முழுமையாக நிறுத்த வேண்டும். அண்டை மாநிலங்களுக்குத் தேவைப்பட்டால் பயிா்க்கிவிவுகளை மக்கச் செய்யும் ரசாயனக் கலவைவை தில்லி அரசும் பூசா வேளாண் ஆராய்சி மையமும் வழங்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.