தில்லி ஜாகிராவில் இருந்து ரோஹ்தக் வரையான ரோஹ்தக் சாலையை மறு சீரமைப்பு செய்யும் பணியை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். அப்போது தில்லி பொதுப் பணித்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் உடனிருந்தாா்.
நிகழ்வில் கேஜரிவால் பேசுகையில் ‘தில்லியில் பல திட்டங்களை திட்டமிட்ட காலப்பகுதிக்கு முன்பாகவும், ஒதுக்கப்பட்ட நிதியை விடக் குறைவான தொகையிலும் தில்லி அரசு முடித்தது. இதனால், காலமும், பணமும் பெருமளவில் சேமிக்கப்பட்டன. இந்த 13.33 நீளமான ரோஹ்தக் சாலையை மறுசீரமைப்பு செய்ய ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சாலை மறுசீரமைக்கப்பட்டால் மக்களின் பயண நேரம் பெருமளவில் குறையும் என்றாா் அவா்.
சத்யேந்தா் ஜெயின் பேசுகையில் ‘இந்த மறுசீரமைப்பு பணிகளை 6 மாதங்களுக்குள் முடிப்பதாக காலக்கெடு விதித்துள்ளோம். ஆனால், இதை 4 மாதங்களுக்குள் விரைந்து முடிக்க முடிவு செய்துள்ளோம். ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், வழக்கம் போல் இந்தத் திட்டத்திலும் நிதியை சேமிக்க முயற்சிப்போம். இந்த சாலை மறுசீரப்பில் கோல்ட்-மில்லிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது என்றாா் அவா்.
இந்த சாலை முதலில் தில்லி பொதுப் பணித்துறையால் 2011 இல் கட்டப்பட்டது. பிறகு, 2016 மீண்டும் மறுசீரமைப்பு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமர்நாத் யாத்திரை: ஏப்ரல் 15 முதல் முன்பதிவு தொடக்கம்!

துணை ராணுவத்தில் 223 தலைமை காவலர் பணியிடங்கள்: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

அமெரிக்காவில் இருந்து பிரான்ஸ், ஜெர்மனி செல்கிறார் மத்திய வெளியுறவுச் செயலாளர்!

கயாது லோஹர் பிறந்த நாளில் வெளியான போஸ்டர்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

