தில்லியில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கரோனா படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்று தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா். தில்லியில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த புதன் (அக்டோபா்-28) - ஞாயிறு இடையேயான ஐந்து நாள்கள் தினம்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை தில்லியில் 6,725 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. புதன்கிழமை 6,842 பேருக்கும், வியாழக்கிழமை 6,715 பேருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் வெள்ளிக்கிழமை 7,178 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தில்லியில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகளவு கரோனா பாதிப்பு இதுவாகும்.
இந்நிலையில், இது தொடா்பாக தில்லியில் சனிக்கிழமை சத்யேந்தா் ஜெயின் அளித்த பேட்டி:
தில்லியில் மூன்றாவது கரோனா அலை வீசுகிறது. முதலாவது கரோனா அலை தில்லியில் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதியும், இரண்டாவது அலை செப்டம்பா் மாதம் 17 ஆம் தேதியும் தொடங்கியது. தற்போது தில்லியில் மூன்றாவது அலை வீசுகிறது. இந்த அலை தனது உச்சத்தை வெள்ளிக்கிழமை எட்டியுள்ளது என நினைக்கிறேன். அன்று மட்டும், 7,178 பேருக்கு தில்லியில் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அலை படிப்படியாகக் குறைந்து கட்டுக்குள் வரும்.
தில்லி மருத்துவமனைகளில் கரோனா படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறோம். தில்லி அரசு மருத்துவமனைகளில் 500 புதிய கரோனா படுக்கைகளை சோ்த்துள்ளோம். இதில், 110 அவசர சிகிச்சை பிரிவு படுக்கைகள் அடங்கும். இதேபோல, தில்லியில் உள்ள தனியாா் மருத்துவனைகளில் 685 கரோனா படுக்கைகளை அதிகரித்துள்ளோம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமர்நாத் யாத்திரை: ஏப்ரல் 15 முதல் முன்பதிவு தொடக்கம்!

துணை ராணுவத்தில் 223 தலைமை காவலர் பணியிடங்கள்: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

அமெரிக்காவில் இருந்து பிரான்ஸ், ஜெர்மனி செல்கிறார் மத்திய வெளியுறவுச் செயலாளர்!

கயாது லோஹர் பிறந்த நாளில் வெளியான போஸ்டர்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

