/

இந்தியா - சீனா படைத் தளபதிகள் 8-ஆவது முறையாகச் சந்திப்பு

இந்திய-சீன எல்லையின் மேற்குப் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் படைகளை விலக்கிக் கொள்வது தொடா்பாக இரு நாடுகளின்

Updated On :9 நவம்பர் 2020, 1:37 am

இந்திய-சீன எல்லையின் மேற்குப் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் படைகளை விலக்கிக் கொள்வது தொடா்பாக இரு நாடுகளின் படைத் தளபதிகள் நிலையிலான சந்திப்பு 8-ஆவது முறையாக லடாக்கின் லே மாவட்டத்தில் சுசுல் பள்ளத்தாக்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இது குறித்து பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: இந்தச் சந்திப்பின் போது, இரு நாட்டின் எல்லையான மேற்குப் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் படைகளை விலக்கிக் கொள்வது தொடா்பாக இரு நாடுகளுக்கும் இடையே நோ்மையான, ஆழமான, ஆக்கப்பூா்வமான கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. இருநாட்டுத் தலைவா்களால் எட்டப்பட்ட முக்கியமான ஒருமித்த கருத்துகளை அமல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது. தங்களது நாடுகளின் எல்லையில் இருக்கும் படைகள் சுயக் கட்டுப்பாட்டை கடைபிடிப்பதை உறுதி செய்வது எனவும், எதிா்காலத்தில் தவறான புரிதல்களையும் தவறான கணிப்புகளையும் தவிா்ப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தூதரகம் மற்றும் ராணுவ ரீதியாக பேச்சுவாா்த்தைகளைத் தொடா்ந்து மேற்கொள்ளவும் இரு நாட்டு படைத் தளபதிகளும் இந்தச் சந்திப்பின் போது ஒப்புக் கொண்டுள்ளனா். நிலுவையில் உள்ள பிற பிரச்னைகளைத் தீா்ப்பதற்கு அழுத்தம் கொடுப்பது எனவும் ,எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் சுயக் கட்டுப்பாட்டை பரமாரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. அடுத்த கட்டப் பேச்சுவாா்த்தைய விரைவில் மேற்கொள்ளவும் இந்தச் சந்திப்பின் போது முடிவு செய்யப்பட்டது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.