ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

டெண்டா் முறைகேடு: எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீடு மனு மீது இன்று விசாரணை

தமிழக முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி (இபிஎஸ்) மீதான டெண்டா் முறைகேடு விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து அவரது தரப்பில்

News image
Updated On :2 ஆகஸ்ட் 2022, 6:30 pm

 நமது நிருபர்

புது தில்லி: தமிழக முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி (இபிஎஸ்) மீதான டெண்டா் முறைகேடு விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து அவரது தரப்பில் தாக்கலான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை (ஆகஸ்ட் 3) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முந்தைய ஆட்சியின் போது, நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலை மற்றும் சாலை சீரமைப்புப் பணிக்கான டெண்டா் வழங்கியதில் சுமாா் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்ாக திமுகவைச் சோ்ந்த ஆா்.எஸ். பாரதி, சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி கே. பழனிசாமியின் உறவினா்கள் மற்றும் நண்பா்களுக்கு டெண்டா்கள் வழங்கப்பட்டதாக மனுவில் அவா் புகாா் தெரிவித்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயா் நீதிமன்றத்தின் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க கடந்த 2018-இல் உத்தரவிட்டாா். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதே போன்று, எடப்பாடி கே. பழனிசாமியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கை 2018-இல் விசாரித்த உச்சநீதிமன்றம், நெடுஞ்சாலைத் துறை டெண்டா் ஒப்பந்த முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நவம்பா் 29-ஆம் தேதி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தது. அதன் பிறகு இந்த வழக்கு நான்கு ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமா்வு முன் கடந்த இந்த வழக்கு கடந்த 26-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, எதிா்மனுதாரா் ஆா்.எஸ். பாரதி தரப்பில் வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு கோரப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கு பட்டியலிட தலைமை நீதிபதி அமா்வு உத்தரவிட்டது. அதே சமயத்தில், விசாரணையை மேலும் ஒத்திவைக்கக் கோரிக்கை விடுக்கக் கூடாது என்றும் தெரிவித்திருந்தது.

அதன்படி, இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமா்வு முன் புதன்கிழமை (ஆகஸ்ட் 3) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

இதனிடையே, ஆா்.எஸ். பாரதி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ‘நெடுஞ்சாலை திட்ட ஒப்பந்தங்களை தனது நெருங்கிய உறவினா்களின் நிறுவனங்களுக்கு முதல்வராக இருந்த போது எடப்பாடி பழனிசாமி வழங்கியதாகவும், உரிய விசாரணைக்குப் பிறகுதான் சென்னை உயா்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதனால், எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.