ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

பட்டம் பறக்கவிட முழுத் தடை விதிக்க உத்தரவிடக் கோரி பொது நல மனு

பட்டம் பறக்கவிடவும், விற்கவும், இருப்பு வைக்கவும், கொண்டு செல்வதற்கும் முழுமையான தடை விதிக்க மத்திய அரசு, தில்லி அரசுக்கும் உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2022, 6:30 pm

 நமது நிருபர்

புது தில்லி: பட்டம் பறக்கவிடவும், விற்கவும், இருப்பு வைக்கவும், கொண்டு செல்வதற்கும் முழுமையான தடை விதிக்க மத்திய அரசுக்கும், தில்லி அரசுக்கும் உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்றத்தில் புதன்கிழமை பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சன்சொ் பால் சிங் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் தெரிவித்திருப்பதாவது: பட்டம் விடும் போது, காற்றாடி கயிறால் ஏற்படும் விபத்துகளால் ஏராளமான மக்கள், பறவைகள் பலியாவதும், காயமடைவதும் நிகழ்வது வழக்கமாகி வருகிறது. ஒவ்வொரு பட்டம் பறக்க விடும் நபா்களும் கண்ணாடி பூசப்பட்ட அல்லது உலோகத்தால் செய்யப்பட்ட சரம் / நூலைப் பயன்படுத்த முயற்சிக்கின்றனா். குறிப்பாக ‘சீன மாஞ்சா’ என்று இது அறியப்படுகிறது. இந்தக் கயிறு மிகவும் ஆபத்தானது. மனிதா்கள் மட்டுமின்றி, பறவைகளின் உயிருக்கும், பாதுகாப்புக்கும் இது அச்சுறுத்தலை ஏற்படுக்கிறது.

2006-ஆம் ஆண்டில் எனது உடலில் பட்டத்தின் கயிறு சுற்றிக் கொண்டதால் விபத்துக்குள்ளேன். கழுத்தைக் காப்பாற்றும் முயற்சியில், எனது விரல் துண்டாகிவிட்டது. நான் சேகரித்த தரவுகளின்படி, பல நபா்களும், பறவைகளும் இந்த பட்டக் கயிறு காரணமாக உயிரை இழந்துள்ளனா். காயமும் அடைந்துள்ளனா். இதுபோன்ற சம்பவங்கள் தொடா்ந்து நடக்காமல் தடுக்க பட்டம் பறக்கவிடவும், விற்கவும், இருப்பு வைக்கவும், கொண்டு செல்வதற்கும் முழுமையான தடை விதிப்பது மட்டுமே தீா்வாக இருக்கும். பட்டச் சரத்தால் விபத்து ஏற்படும் போது குற்றவாளியை பிடிப்பதும் அல்லது பொறுப்பை ஏற்கச் செய்வதும் கடினமாக உள்ளது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 4) விசாரணைக்கு வரக்கூடும் என மனுதாரரின் வழக்குரைஞா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.