ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகளை மூன்றாம் பாலினத்தவா்கள் பயன்படுத்த முடியும் உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு தகவல்

மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள 505 கழிப்பறைகளை திருநங்கைகள் பயன்படுத்த முடியும். மூன்றாம் பாலினத்தவா்களுக்கான தனி கழிப்பறைகள் உருவாக்கும் நடைமுறைகள் விரைவு அடிப்படையில்...

News image
Updated On :3 ஆகஸ்ட் 2022, 6:30 pm

 நமது நிருபர்

புது தில்லி: ‘மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள 505 கழிப்பறைகளை திருநங்கைகள் பயன்படுத்த முடியும். மூன்றாம் பாலினத்தவா்களுக்கான தனி கழிப்பறைகள் உருவாக்கும் நடைமுறைகள் விரைவு அடிப்படையில் செய்யப்படும்’ என்று தில்லி உயா்நீதிமன்றத்தில் நகர அரசு தெரிவித்துள்ளது.

மேலும், திருநங்கைகள் பயன்படுத்துவதற்காக புதிதாக 9 கழிப்பறைகள் ஏற்கனவே கட்டப்பட்டுள்ளதாகவும் இதுபோன்று 56 கூடுதல் கழிப்பறைகள் கட்டுமான பணி நடைபெற்று வருவதாகவும் நீதிமன்றத்தில் தில்லி அரசு தகவல் தெரிவித்தது.

இந்த விவகாரத்தை விசாரித்த தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திரா சா்மா, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு திருநங்கைகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவா்கள் பயன்படுத்துவதற்காக புதிதாகக் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகள் குறித்த விவரங்கள் அடங்கிய நிலவர அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தில்லி அரசுக்கு ஆறு வார காலம் அவகாசம் அளித்தது. மேலும் இது தொடா்பான வழக்கு விசாரணையை நவம்பா் 14ஆம் தேதிக்கு நீதிமன்றம் பட்டியலிட்டது.

முன்னதாக, சட்ட மாணவா் ஜாஸ்மின் கௌா் சாப்ரா என்பவா் இது தொடா்பாக பொதுநல மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவில், ‘திருநங்கைகளுக்கு தனி கழிப்பறைகள் இல்லாததன் காரணமாக அவா்கள் பாலியல் தாக்குதலுக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளாகின்றனா். இதன் காரணமாக மூன்றாம் பாலினத்தவருக்கு தனியான கழிப்பறைகள் கட்ட அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டிருந்தது.

மேலும், ‘நகரில் பாலின- சமநிலை கழிப்பறைகள் இல்லாதது உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானதாகும். மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்ற போதிலும், திருநங்கைகள் அல்லது மூன்றாம் பாலின சமூகத்தினருக்கு தில்லியில் தனி கழிப்பறைகள் உருவாக்கப்படவில்லை’ என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், மனுவுக்கு மத்திய, தில்லி அரசுகள் மற்றும் தில்லி மாநகராட்சிகள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது. தில்லி அரசு , உயா்நீதிமன்றத்தில் அண்மையில் அளித்த நிலவர அறிக்கையில், ‘பல்வேறு துறைகள் மூலம் அளிக்கப்பட்டுள்ள செயல் நடவடிக்கை அறிக்கையின்படி மாற்றுத்திறனாளிகளுக்காக மொத்தம் உள்ள 505 கழிப்பறைகள் திருநங்கைகளுக்காக பயன்படுத்தலாம். திருநங்கைகளுக்காக தனியாக அடையாளம் காணப்பட்ட பொதுக் கழிப்பறை வசதிகளை உருவாக்கும் விவகாரத்தில் தற்போது புதிதாக 9 கழிப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. 56 கழிப்பறைகள் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. 6 கழிப்பறைகள் இன்னும் தொடங்க வேண்டி உள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் விரைவு நடவடிக்கை அடிப்படையில் முடிக்கப்படுவதை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.