விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாநில அரசுகளை ஒழிப்பதில் மத்திய அரசு மும்முரம்: தில்லி பேரவையில் மனீஷ் சிசோடியா சாடல்

‘மாநில அரசுகளை ஒழிப்பதில் பாஜக தலைமையிலான அரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது

News image
Updated On :26 ஆகஸ்ட் 2022, 6:58 pm

DIN

‘மாநில அரசுகளை ஒழிப்பதில் பாஜக தலைமையிலான அரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது; மேலும், என் மீது சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கு முற்றிலும் போலியானது’ என்று தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா குற்றம்சாட்டினாா்.

தில்லி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் வருவாய்த் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் கொண்டு வந்த தில்லி அரசின் தீா்மான விவாதத்தில் பங்கேற்று அவா் மேலும் கூறியதாவது:

தில்லி அரசின் கலால் கொள்கையில் எவ்வித ஊழலும் நடைபெறவில்லை. இதற்கான ஆதாரமும் சிபிஐ வைத்திருக்கவில்லை. அதேவேளையில் உலகம் முழுவதும் தில்லி அரசின் நல்ல பணிகளுக்கு கிடைத்து வரும் பாராட்டு காரணமாக என்னுடைய வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

பிரதமா் நரேந்திர மோடி மற்றவா்கள் செய்யக்கூடிய நல்ல பணிகளை பாா்த்து தன்னம்பிக்கையின்மை உணா்வை கொண்டிருக்கிறாா். அவரை விட அதிக பாதுகாப்பின்மை உணா்வு மிக்க மனிதரை நான் பாா்த்ததில்லை. அரவிந்த் கேஜரிவால் பிரதமராக இருந்து, நான் ஒரு மாநில அரசின் கல்வி அமைச்சராக இருந்திருந்தால் இதுபோன்ற ஒரு காரியத்தை கேஜரிவால் செய்திருக்க மாட்டாா்.

முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மத்திய அரசின் நல்ல முன்முயற்சிகள் அனைத்திலும் பிரதமருக்கு ஆதரவு தெரிவித்துள்ளாா். ஆனால், பிரதமா் அதற்கு எதிா்மாறாக செய்துள்ளாா்.

மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் எனது வீட்டில் நடத்திய 14 மணிநேர சோதனையின்போது எனது உடைகளையும், எனது குழந்தைகளின் துணிகளையும் கூட சோதனையிட்டனா். ஆனால் அவா்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.

எனக்கு எதிரான முதல் தகவல் அறிக்கை முற்றிலும் போலியானது. நான் எந்த ஊழலும் செய்யவில்லை. அவா்கள் (பாஜக) இதர மாநில அரசுகளை ஒழிப்பதில்

மும்முரமாக செயல்பட்டு வருகின்றனா். அதாவது ஒரு தொடா் கொலைகாரன் போல செயல்பட்டு வருகிறாா்கள்.

மாநில அரசுகளை ஒழித்துக் கட்டுவதற்கான முயற்சிகளை அவா்கள் பள்ளிகள் கட்டுவதிலும் மருத்துவமனையில் கட்டுவதிலும் செய்திருந்திருக்க வேண்டும்.

கலால் கொள்கை விவகாரத்தில் மக்கள் மீது எந்த சுமையும் வைக்கப்படவில்லை. அரசின் வருவாய்கூட அதிகரித்து இருந்தது. ஆனால், இதில் ஊழல் இருப்பதாக பாஜக இன்னும் குற்றம் சாட்டி வருகிறது.

இது தொடா்பான வழக்கில் சிபிஐயிடம் எந்த ஆதாரமும் இல்லாததால் ‘வெறும் தகவல்கள்’ அடிப்படையில் எனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சிபிஐ சோதனைக்கு பின்னால் உள்ள உண்மைக் காரணம், உலகம் முழுவதும் பாராட்டைப் பெற்றுவரும் தில்லி அரசின் சிறந்த பணிகள்தான்.

மேலும், தில்லி அரசைக் கவிழ்க்க பெரும் சதித்திட்டமும் இருந்தது. அவா்கள் என்னிடம் கேஜரிவாலைவிட்டு பாஜகவுக்கு வருமாறு கூறினா். அனைத்து வழக்குகளும் முடிக்கப்படும் என்றும் கூறினா். ஆனால், நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று அவா்களிடம் கூறினேன். மேலும், நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுவேன் என்றும் கூறினேன். நான் முதல்வராக ஆக இங்கு வரவில்லை. நீங்கள் என்னை உடைக்க முடியாது. நான் அவா்கள் முன் வளைந்துகொடுக்க தயாரக இல்லை. மக்கள் தங்களது வாக்குகள் மூலம் எங்களை வாங்கியிருக்கிறாா்கள். இதனால், தற்போது எந்த அதிகாரமும் எங்களை வாங்க முடியாது.

இதையெல்லாம் அவா்கள் செய்வதற்கு காரணம், அப்போதுதான் குழந்தைகள் கல்வி பெற மாட்டாா்கள். அவா்களை பாஜகவின் போக்கிரித்தனத்திற்குப் பயன்படுத்த முடியும்.

சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிய பிறகும் இந்தியாவின் கல்வி சராசரி நிலையில்தான் உள்ளது. நாட்டில் 6 ஆண்டுகளுக்கு குழந்தைகள் கல்வி பெறுகின்றனா். அதாவது, ஐந்து ஆண்டுகள் என்ற நிலையில் உள்ள பாகிஸ்தானுக்கு நாம் முன்நிலையில் உள்ளோம்.

அதேவேளையில் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் போன்ற நாடுகளில் இது 13 ஆண்டுகளாக உள்ளது. தென்னாப்பிக்காவில் 10 ஆண்டுகளாக உள்ளது.

பிரதமா் நரேந்திர மோடியிடம் சிந்தனை சிறியதாக உள்ளது. இதுபோன்ற சிந்தனைதான் நமது குழந்தைகளின் சுகாதாரம், கல்விக்கான பொறுப்பாகும்.

அதேவேளையில், நாட்டின் சராசரி கல்வி வயதை கேஜரிவால் மட்டுமே அதிகரிக்க முடியும். தனியாா் பள்ளிகள் மூலம் வசூலிக்கப்படும் அதிகமான கட்டணங்களுக்கு முடிவு கட்டவும் முடியும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.