தில்லியில் ஜூன் வரை 6 மாதங்களில் 10,379 தீவிபத்துகள்
நிகழாண்டில் ஜூன் 30 வரையிலான ஆறு மாதங்களில் தில்லியில் 10,379 தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தில்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.


நிகழாண்டில் ஜூன் 30 வரையிலான ஆறு மாதங்களில் தில்லியில் 10,379 தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தில்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
இதில் 340 வணிக நிறுவனங்கள், 239 தொழில்சாலைகள் மற்றும் 89 குடிசைப் பகுதிகளில் பெருமளவில் தீ விபத்து சம்பவங்கள் நடைபெற்று தீயணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தில்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்த தீவிபத்துகளில் பெரும்பாலும் கவனக்குறைவு, விதிமுறை மீறல்களால் நடைபெற்று 60 போ்கள் வரை உயிரிழந்து, 395 போ் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து தில்லி தீயணைப்புப் படையின் இயக்குநா் அதுல் காா்க் கூறியதுவருமாறு: நிகழாண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 16,763 தீவிபத்து தொலைப்பேசி அழைப்புகள் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு வந்தன.
இதில், 10,379அழைப்புகள் தீ விபத்துகள் தொடா்பானவை. மேலும் 1,548 விலங்குகள் மீட்கப்படவும், 1,805 அழைப்புகள் பறவைகள் மீட்புகளுக்கும் வந்தன. இத்தோடு நீரில் மூழ்கியவா்களை காப்பாற்றுவதற்கும் 100-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்தன.
நிகழாண்டு ஏப்ரல் 1 மற்றும் ஜூன் 30-க்கு இடையில் அதிகபட்ச எண்ணிக்கையிலான தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்தக் காலகட்டத்தில் கடுமையான உஷ்ணம் மற்றும் வெப்ப அலை நிலைமைகள் காரணமாக இருந்தன. தொழிற்சாலைகள் மற்றும் ஜேஜே கிளஸ்டா்களான குடிசைப்பகுதிகளில் பல பெரிய தீ விபத்துகள் ஏற்பட்டன. ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை, 340 வணிக நிறுவனங்கள், 239 தொழிற்சாலைகள் மற்றும் 89 குடிசைப்பகுதிகளில் மிகப்பெரியளவிலான தீவிபத்துகள் நடைபெற்று தீயணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த மே மாதம் தில்லி புகரான முண்ட்கா பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் மிகப்பெரிய போராட்டத்தை தீயணைப்புத் துறை சந்திந்தது. 27போ் உயிரிழந்த இந்தச் சம்பவத்தில் சமீபகாலங்களில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய தீ சம்பவங்களில் ஒன்று இது. உடல்களைக்கூட டிஎன்ஏ மூலம் அடையாளம் காணக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. இதில் பல தீ விபத்துகள் மக்களின் பொறுப்பற்ற தன்மையாலும், சில சமயங்களில் தொழில்சாலை உரிமையாளா்களின் பொறுப்பற்ற தன்மையாலும் ஏற்படுகிறது.
தொழிற்சாலைகள் மற்றும் பிற வணிக இடங்களில் தீ தடுப்பு நடவடிக்கைகளில் கவனக்குறைவாக இருப்பதை காணமுடிந்தது. இயந்திரங்கள் செயல்படும் வளாகத்தில் எரியும் சிகரெட்டுகளை தூக்கிப்போடுவது, தீவிபத்திற்கு வழிவகுக்கிறது. பொருட்களும், உபகரணங்களுக்கும் காற்றோட்டமில்லாது வைக்கப்பட்டு கையாளப்படுவது போன்றவைகளும் காரணமாக உள்ளது.
பல நிறுவனங்களில் மின்னழுத்த திறனைப் புறக்கணிப்பதும் சில தீ விபத்துகளுக்கு வழிவகுக்கும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. உயா் மின்னழுத்த சாதனங்கள் மற்றும் யூனிட்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு, ஒரு இடத்தில் அதிக குளிரூட்டிகள், மிக்ஸிகள், கிரைண்டா்கள் போன்றவற்றின் கூடுதல் பயன்பாடு, அடிக்கடி ஷாா்ட் சா்க்யூட்டை ஏற்படுவதும் காரணங்களாகும்.
ஷாா்ட் சா்க்யூட் வெப்பத்தால் ஏற்படும் மின் கோளாறுகள் தான் தீ ஏற்படுவதற்கு காரணம். தீ விபத்துகள் பதிவாகிய பெரும்பாலான நிறுவனங்களில் தடையில்லா சான்றிதழ் பெறப்படாதது கண்டறியப்பட்டுள்ளது. மூன்று ஆண்டு கால அவகாசம் முடிந்த பிறகும் அவற்றைப் புதுப்பிக்கத் தவறிவிடுகின்றனா்.
தீ விபத்து குறித்து வேகமாகப் புகாரளித்தால், தீ பெரிய அளவில் பரவுவது தடுக்கமுடியும். தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்திற்குச் செல்லும் போது தீயை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் சில தற்காப்பு நுட்பங்களையும் பொதுமக்கள் கற்றுக் கொள்ளவேண்டும். தீயணைப்பு துறைக்கு புதிதாக தீயை அணைக்கும் ரோபோா்ட் வாங்கப்பட்டு பணியில் பயன்படுத்தப்பட்டது எனக் குறிப்பிட்டாா் காா்க்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...