ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

தில்லி அரசின் இருவார மெகா மரக்கன்று நடும் திட்டம் தொடக்கம்

தில்லி அரசு மெகா மரக்கன்று நடும் இயக்கத்தைத் பதினைந்து நாள்களுக்கு நடத்துகிறது. 

News image
Updated On :11 ஜூலை 2022, 6:30 pm

 நமது நிருபர்

புது தில்லி: தில்லி அரசு மெகா மரக்கன்று நடும் இயக்கத்தைத் பதினைந்து நாள்களுக்கு நடத்துகிறது. தேசியத் தலைநகா் தில்லியின் பசுமைப் பகுதியை மேலும் அதிகரிக்க இந்தத் திட்டத்தை தில்லி சுற்றுச்சுழல் துறை அமைச்சா் கோபால் ராய் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

கேஜரிவால் தலைமையிலான அரசு தனது ஆட்சிக் காலத்தில் தலைநகா் தில்லியில் 2 கோடி மரங்கள் நடப்படும் என அறிவித்துள்ளது. இதில் நிகழாண்டில் 35 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக தில்லி அரசு ‘வனத் திருவிழா’ வை 15 தினங்களுக்கு நடத்துகிறது. இதன்படி திங்கள்கிழமை தில்லி துணை முதல்வா், அமைச்சா்கள், சட்டப்பேரவை தலைவா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆகியோா் தங்கள் சட்டப்பேரவை தொகுதிகளில் மரக்கன்றுகளை நடும் பணிகளை தொடங்கியுள்ளனா்.

இந்த வனத் திருவிழாவை மத்திய மலை முகடு பகுதியில் தில்லி சுற்றுப்புறச் சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தொடங்கிவைத்தாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியது வருமாறு: சென்ட்ரல் ரிட்ஜில் (மத்திய மலைமுகடு) துவங்கும் இந்த ‘வனத் திருவிழா’ வருகின்ற ஜூலை 25-ஆம் தேதி அசோலா பட்டி வனவிலங்கு சரணாலயத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியுடன் நிறைவடையும். இந்த ஆண்டு தில்லியில் சுமாா் 35 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். தில்லி சட்டப்பேரவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயல், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா மற்றும் அமைச்சா்கள் இந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனா். தில்லி அரசின் 19 துறைகளும் இந்த மரக்கன்று நடும் பணிகளில் பங்கேற்கும்

70 சட்டபேரவை உறுப்பினா்களும் (எம்எல்ஏக்கள்) அவரவா்கள் தொகுதிகளில் மரக்கன்றுகளை நடுவாா்கள். இந்த இரு வார இயக்கத்தில் 29 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். இதில் 7 லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். இதில் சமூக ஆா்வலா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் (படம்) போன்றோரும் பங்கேற்று மரக்கன்றுகளை நடும் பணிகளில் ஈடுபடுவாா்கள். 2021-22-ஆம் ஆண்டில் 28 லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும் என்று தில்லி அரசுக்கு மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. நகரில் 35 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டது.

கடந்த 2013-ஆம் ஆண்டில் தில்லியின் வனப்பரப்பு 20 சதவீதமாக இருந்தது. இது கேஜரிவால் ஆட்சியில் 23.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் வன ஆய்வு அறிக்கையில், ‘ கடந்த இரண்டு ஆண்டுகளில் தில்லியின் பசுமைப் பரப்பு அதன் புவியியல் பரப்பில் 21.88 சதவீதத்தில் இருந்து 23.06 சதவீதமாக அதிகரித்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா் கோபால்ராய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.