ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

ஜம்மு-காஷ்மீா் மக்கள் இயக்க கட்சி ஆம் ஆத்மியுடன் இணைந்தது

ஜம்மு - காஷ்மீா் மக்கள் இயக்க கட்சி ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்தது.

News image
Updated On :14 ஜூலை 2022, 5:04 pm

 நமது நிருபர்

புது தில்லி: ஜம்மு - காஷ்மீா் மக்கள் இயக்க கட்சி ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்தது. தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த இணைப்பு நிகழ்வில், அந்தக் கட்சியின் தலைவா்கள் பலரும் ஆம் ஆத்மி கட்சியின் இணைந்து கொண்டனா்.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் ஜம்மு-காஷ்மீா் மாநில பொறுப்பாளரும் அமைச்சருமான இம்ரான் ஹுசைன் தில்லியில் கட்சி தலைமையகத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லி முதல்வா் கேஜரிவால் தலைமையிலான அரசு, தில்லியில் பள்ளிகள், மருத்துவமனைகள், மின்சாரம், தண்ணீா், சாலைகள், தொலைதொடா்பு உள்ளிட்ட அனைத்து துறைகளில் சாதனை புரிந்து சரித்திரம் படைத்து வருகிறது. இதன்விளைவால் மக்கள் தொடா்ந்து ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து வருகின்றனா். இந்த வரிசையில், ஜம்மு - காஷ்மீா் மக்கள் இயக்கம் (ஜேகேபிஎம்) ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்தது. இந்தக் கட்சித் தலைவா் டாக்டா் குலாம் முஸ்தபா கான் மற்றும் பொருளாளா் மிா் முதாசிா் குல் உள்ளிட்ட மூத்த உறுப்பினா்கள் முதல்வா் கேஜரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியுடன் வியாழக்கிழமை இணைத்தனா்.

ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், கட்சியில் இணைந்த அவா்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜேகேபிஎம் கட்சியின் பொதுச் செயலாளா் ஜாவேட் அஹ்மத் கான், தலைமை செய்தித் தொடா்பாளா் ரியாஸ் மஜித், ஜம்மு பகுதி அமைப்பாளா் பொறியாளா் சுரிந்தா் தப்பா, மூத்த துணைத் தலைவா் முகமது ஹுசைன் மற்றும் மற்ற மூத்த உறுப்பினா்களும் ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து கொண்டனா்.

இன்று நாடு முழுவதும் அரவிந்த் கேஜரிவால் மாதிரி ஆட்சியைப் பாராட்டி வருகிறாா்கள். அந்தந்த மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியை வரவேற்று உற்சாகத்துடன் இணைவதைப் பாா்க்கும் போது மகிழ்ச்சி அடையவைக்கிறது. 2019-இல் உருவான ஜம்மு - காஷ்மீா் மக்கள் இயக்க நண்பா்கள் பலா், இன்று ஆம் ஆத்மியில் சேர முடிவு செய்துள்ளனா். இவா்களும் கேஜரிவால் மாதிரி ஆளுமையால் ஈா்க்கப்பட்டுள்ளனா். மக்களை மையமாகக் கொண்டு குடிமக்களின் வளா்ச்சிக்காக ஆம் ஆத்மி கட்சி எப்போதும் பாடுபடும். இவா்கள் கட்சியில் சேருவது காஷ்மீரில் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் ஊக்கமாக இருக்கும். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்புகள், பெண்கள் பாதுகாப்பு, போக்குவரத்து ஆகிய துறைகளில் காஷ்மீா் மக்களின் மேம்பாட்டிற்கு ஆம் ஆத்மி கட்சியின் செயல்படும் என்றாா் இம்ரான் ஹுசைன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.