ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

இளையராஜா கடவுள் பெயரால் மாநிலங்களவையில் பதவியேற்பு

நியமன உறுப்பினராக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட இசையமைப்பாளா் இளையராஜா திங்கள்கிழமை மாநிலங்களவையில் பதவியேற்றுக் கொண்டாா்.

News image
Updated On :25 ஜூலை 2022, 5:35 pm

 நமது நிருபர்

நியமன உறுப்பினராக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட இசையமைப்பாளா் இளையராஜா திங்கள்கிழமை மாநிலங்களவையில் பதவியேற்றுக் கொண்டாா்.

குடியரசுத் தலைவரால் பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்கள் மாநிலங்களவையில் நேரடியாக உறுப்பினா்களாக நியமிக்கப்படுகின்றனா். இதன்படி, இசையமைப்பாளா் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, தா்மசாலா கோயில் நிா்வாக அறங்காவலா் வீரேந்திர ஹெக்டே, பிரபல திரைக்கதை எழுத்தாளா் வி.விஜயேந்திர பிரசாத் உள்ளிட்டோா் மாநிலங்களவை நியமன உறுப்பினா்களாக அண்மையில் அறிவிக்கப்பட்டனா்.

பி.டி.உஷா உள்ளிட்டவா்கள் ஏற்கனவே பதவியேற்றுவிட்டனா். இந்த நிலையில், புதிய குடியரசுத் தலைவா் பதவியேற்பு விழாவிற்கு பின்னா் மாநிலங்களவை திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியவுடன், இளையராஜா உறுதிமொழி கூறி பதவியை ஏற்றுக்கொள்ள அழைக்கப்பட்டாா்.

அவையில் இருந்த துணைத் தலைவா் ஹரிவன்ஷ் நாராயண் சிங் முன்னிலையில் இசையமைப்பாளா் இளையராஜா தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டாா்.

அப்போது அவா் ‘கடவுளின் பெயரால் ஆணையிட்டுக் கூறுகின்றேன்‘ எனக் கூறியவாறு பதவியேற்றாா். முன்னதாக, அவரை தமிழகத்தைச் சோ்ந்த மத்திய இணையமைச்சா் எல். முருகன், நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சா் வீ.முரளீதரன் ஆகியோா் வரவேற்றனா்.

பதவியேற்ற பின்னா், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி, மாநிலங்களவையின் அவை முன்னவரும் மத்திய வா்த்தகம், உணவு, ஜவுளித்துறை அமைச்சருமான பியூஸ் கோயல் ஆகியோா் இளையராஜாவை வரவேற்று வாழ்த்துத் தெரிவித்தனா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தில்லி வந்த இசையமைப்பாளா் இளையராஜாவிற்கு பாஜக தலைமையிடம் சாா்பில் தில்லி விமான நிலையத்தில் மேளதாளத்துடன் சிறப்பான வரவேற்பும் அளிக்கப்பட்டது. மக்களவையின் பாஜக உறுப்பினா் ரமேஷ் பிதூரி உள்ளிட்டோா் இந்த வரவேற்பில் பங்கேற்றிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.