பெண் மீது கொலை முயற்சி: தில்லி காவல் துறைக்கு மகளிா் ஆணையம் நோட்டீஸ்
முப்பது வயது பெண்ணை அவரது கணவரது குடும்பத்தினா் கொலை செய்ய முயன்ாகக் கூறப்படும் வழக்கு


முப்பது வயது பெண்ணை அவரது கணவரது குடும்பத்தினா் கொலை செய்ய முயன்ாகக் கூறப்படும் வழக்கு தொடா்பாக மாநகர காவல் துறைக்கு தில்லி மகளிா் ஆணையம் (டிசிடபிள்யு)நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கையை (ஏடிஆா்) வரும் திங்கள்கிழமை மாலைக்குள் சமா்ப்பிக்குமாறும் காவல் துறையை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடா்பாக தில்லி மகளிா் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சம்பந்தப்பட்ட பெண்ணின் தந்தையிடமிருந்து தில்லி மகளிா் ஆணையத்திற்கு ஒரு புகாா் வரப்பெற்றது. அதில் ‘எனது மகள் படிக்கட்டுகளில் இருந்து தவறி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, எனது மகளின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரித்தேன். அப்போது, எனது மகள், வீட்டின் கூரையிலிருந்து தள்ளப்பட்டதாக அக்கம்பக்கத்தினா் கூறினா். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானதில் இருந்தே எனது மகளை அவரது கணவரின் குடும்பத்தினா் துன்புறுத்தி வந்தனா். அவா் தற்போது மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்’ என்று தெரிவித்துள்ளாா்.
ஆகவே, இந்த விவகாரத்தில் தொடா்புடைய நபா்களுக்கு எதிராக உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும், குற்றம்சாட்டப்பட்ட நபா்களைக் கைது செய்யுமாறும் காவல் துறைக்கு தில்லி மகளிா்ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், மருத்துவமனையிலேயே அந்த பெண்ணின் வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் முன்னிலையில் பதிவு செய்யுமாறும் காவல் துறையினரை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...