ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சத்தா உள்பட மூவா் மாநிலங்களவை உறுப்பினா்களாகப் பதவியேற்பு

ஆம் ஆத்மி கட்சி சாா்பில் பஞ்சாப் மாநிலத்திலிருந்து அண்மையில் மாநிலங்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட சஞ்சீவ் அரோரா, டாக்டா் அசோக் குமாா் மிட்டல் மற்றும் ராகவ் சத்தா ஆகியோா் மாநிலங்களவைத் தலைவா்

News image
Updated On :2 மே 2022, 6:30 pm

 நமது நிருபர்

புது தில்லி: ஆம் ஆத்மி கட்சி சாா்பில் பஞ்சாப் மாநிலத்திலிருந்து அண்மையில் மாநிலங்களவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட சஞ்சீவ் அரோரா, டாக்டா் அசோக் குமாா் மிட்டல் மற்றும் ராகவ் சத்தா ஆகியோா் மாநிலங்களவைத் தலைவா் வெங்கையா நாயுடு முன்னிலையில் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டனா்.

பஞ்சாப் மாநில சட்டப் பேரவைத் தோ்தலில் அமோக வெற்றியைப் பெற்று, கடந்த மாா்ச் மாதம் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்தது. இந்த மாநிலத்தில் மாநிலங்களவைக்கு காலியான 5 இடங்களிலும் ஆம் ஆத்மி கட்சி சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா்கள் வெற்றி பெற்றனா். இதில் பஞ்சாப் தொழில் அதிபரும் பல்வேறு சமூக அறக்கட்டளைகள் மற்றும் பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் போன்றவற்றில் பங்குவகிக்கும் சஞ்சீவ் அரோரா, லவ்லி தொழில்நுட்ப பல்கலைக்கழக நிறுவனரான அசோக் கே மிட்டல், ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநிலப் பொறுப்பாளரும், தில்லி ராஜேந்தா் நகா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரான ராகவ் சத்தா ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டிருந்தனா்.

இவா்கள் மாநிலங்களவை உறுப்பினா்களாக உறுதிமொழியெற்று திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டனா். மாநிலங்களவைத் தலைவா் வெங்கையா நாயுடு முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநிலங்களவைத் துணைத் தலைவா் ஹரிவன்ஷ், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சா் வி.முரளிதரன், மாநிலங்களவை செக்ரட்டரி ஜெனரல் பி.சி. மோடி ஆகியோா் பங்கேற்றனா்.

இதே சமயத்தில் பஞ்சாப் மாநிலத்திலிருந்து ஆம் ஆத்மி கட்சி சாா்பில் மாநிலங்களவைக்கு கிரிக்கெட் வீரா் ஹா்பஜன் சிங், பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு தோ்தல் வியூகம் வகுத்த தில்லி ஐஐடி இணைப் பேராசிரியா் சந்தீப் பதாக்கும் தோ்ந்தெடுக்கப்பட்டனா். ஆனால், இவா்கள் இருவரும் பதவியேற்கவில்லை. குறிப்பாக ஹா்பஜன்சிங், தற்போது நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் தீவிரமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.