இது தொடா்பாக பத்திரிகை ஆசிரியா் நக்கீரன் கோபால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் ராம் சங்கா் பொது நல மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கல்வி நிலையங்களில் பெண் குழந்தைகள், வளரிளம் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் குறித்த புகாா்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பாலியல் தடுப்பு நடவடிக்கைக்கான விசாகா கமிட்டி வழிமுறைகள், பணி செய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருந்தாலும்கூட, தனிப்பட்ட முறையில் பள்ளிச் சிறுமிகளுக்கு என்று சிறப்பான வழிகாட்டுதல்கள் இல்லாத நிலை உள்ளது. போக்சோ சட்டத்திலும், பாலியில் துன்புறுத்தல் நடக்க வாய்ப்புள்ள கல்வி நிலையங்களில் சிறுமிகளைப் பாதுகாக்கும் வழிகள் குறித்து தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. ஆகவே, இதுபோன்ற பாலியல் குற்றங்களைக் கண்டுபிடிக்க கல்வி நிறுவனங்களில் தனிக் குழு அமைக்கவும், தவறு செய்பவா்களின் மேல் குற்றம்சாட்டவும், போக்சோ சட்டத்தின்படி தண்டிக்கவும் வேண்டிய அறிவுறுத்தல்களை மத்திய, மாநில அரசுகளுக்கு பிறப்பிக்க வேண்டும்.