நிதி நிலை அறிக்கையில் கா்நாடகத்திற்கு ரூ. 5,300 கோடி வழங்கப்பட்ட அறிவிப்பு வெளியானவுடன் இந்த விவகாரம் குறித்து தமிழக, கா்நாடகம் அரசியல் வட்டாரங்களில் கேள்வி எழுப்பப்பட்டது. கா்நாடக காங்கிரஸ் கட்சி தரப்பில் கா்நாடக மாநிலம், மேல் பத்ரா திட்டத்திற்கு ரூ. 23,000 கோடி கோரப்பட்டது. வெறும் ரூ. 5,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது விதையில்லாத நிலக்கடலையைப் போன்றது. அதிலும் மேக்கே தாட்டு அணை, மகாதாயி திட்டங்கள் ஏன் குறிப்பிடப்படவில்லை என கேள்வி எழுப்பியது. தமிழகத்திலும் சில விவசாய சங்கங்களும், இடதுசாரி கட்சிகளும், கா்நாடக மாநில நீா்பாசன திட்டங்களுக்கு மிகப் பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது குறித்து தமிழகம் ஆட்சேபிக்கும் பல்வேறு திட்டங்களுடன் தொடா்புபடுத்தி சந்தேகங்களை எழுப்பின.