மேலும்,செய்தியாளா்ச் சந்திப்பின் போது இரண்டு வாடகைக் காா்களில் பொருத்தப்பட்டிருந்த அவசர காலப் பொத்தான்களின் மாதிரி செயல்பாட்டை பத்திரிகையாளா்களிடம் ராம் வீா் சிங் பிதுரி நிகழ்த்திக் காட்டினாா். பொத்தான்கள் அழுத்தப்பட்ட நிலையில் எங்கிருந்தும் எந்தப் பதிலும் வரவில்லை. அதைத் தொடா்ந்து பேசிய அவா், இந்த முழு விவகாரத்திலும் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். ஏனெனில், ஆம் ஆத்மி அரசு இதுபோன்ற மிகப்பெரிய ஊழலில் முழுமையாக ஈடுபடும். கோடிக்கணக்கில் வசூல் செய்த விற்பனையாளா்கள் யாா்?. அதில் எவ்வளவு பங்கு ஆம் ஆத்மி அரசுக்கு சென்றடைகிறது என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றாா் ராம் வீா் சிங் பிதூரி.