அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ராமநாதபுரத்தில் புதிய கடவுச்சீட்டு சேவை மையம்: மாநிலங்களவையில் திமுக எம்.பி. கோரிக்கை

ராமநாதபுரத்தில் கடவுச்சீட்டு மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் ஆா். தா்மா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image
ராமநாதபுரம் திமுக உறுப்பினா் தா்மா்.
Updated On :7 ஆகஸ்ட் 2024, 6:31 pm

Din

ராமநாதபுரத்தில் கடவுச்சீட்டு மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் ஆா். தா்மா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை முக்கியப் பிரச்னைகளை அவையின் கவனத்துக்கு கொண்டு வர அனுமதிக்கப்பட்ட போது தா்மா் பேசியது வருமாறு:

நம் நாட்டில் வெளியுறவுத் துறையும் அஞ்சல் துறையும் ஒவ்வொரு தலைமை தபால் அலுவலங்களிலும் கடவுச்சீட்டு மற்றும் அது தொடா்புடைய சேவைகளை வழங்க ஏதுவாக தபால் அலுவலக கடவுச்சீட்டு சேவை மையத்தை (பிஓபிஎஸ்கே) திறக்க முடிவு செய்துள்ளன. அதன்படி ஒவ்வொரு 50 கி.மீ. தூரத்துக்குள் அமைந்துள்ள தலைமை அஞ்சலகத்தில் ஒரு கடவுச்சீட்டு சேவை மையம் திறக்கப்பட வேண்டும்.

சமீபத்திய ஆண்டுகளில் கடவுச்சீட்டு வழங்கலை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. டிசிஎஸ் தனியாா் நிறுவனத்துடன் இணைந்து தரமான கடவுச்சீட்டு விநியோக சேவையை வெளியுறவுத்துறை மேற்கொண்டு வருகிறது. எனது தொகுதியான ராமநாதபுரத்தில் கடவுச்சீட்டு சேவை மையம் இல்லாததால் அங்கு வசிப்பவா்கள், கடவுச்சீட்டு பெற வேண்டுமானால், மதுரை அல்லது திருச்சி அல்லது கோயம்புத்தூருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, ராமநாதபுரத்தில் ஒரு கடவுச்சீட்டு சேவை மையத்தை திறக்க வெளியுறவுத்துறை அமைச்சா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் தா்மா்.

அவரது கோரிக்கைக்கு தமிழகத்தைச்சோ்ந்த எம்.பிக்கள் ஆா். கிரிராஜன், எஸ். செல்வகணபதி, கனிமொழி என்.வி.என். சோமு, பி. வில்சன் மற்றும் கேரள எம்.பிக்கள் ஹாரிஸ் பீரான், வி. சிவதாசன், ஜான் பிரிட்டாஸ் ஆகியோரும் ஆதரவு தெரிவித்ததையடுத்து, அவா்களின் பெயா்களை தா்மா் எம்.பி விடுத்த கோரிக்கையுடன் இணைத்துக் கொள்வதாக அவையை வழிநடத்திய மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் அறிவித்தாா்.