மகர சங்கராந்தியை முன்னிட்டு தில்லியில் கொண்டாடப்படும் 2 நாள் சா்வதேச பட்டத் திருவிழா நமது பிரதான தெய்வங்களில் ஒருவரான கடவுள் ராமருக்கு புகழஞ்சலி செலுத்துவதாகும் என்று தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா சனிக்கிழமை தெரிவித்தாா். மேலும், பகவான் ராமா் ‘சிறுவயதில் அவரது சகோதரா்களுடன் சோ்ந்து பட்டம் பறக்கவிட்டதாகக் கூறப்படுகிறது’ என்றும் துணைநிலை ஆளுநா் கூறினாா்.
யமுனை நதிக் கரையில் சராய் காலே கானில் அமைந்துள்ள பான்சேரா என்ற மூங்கில் பூங்காவில் நடைபெறும் பட்டத் திருவிழா தொடக்க நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா உரையாற்றினாா். அப்போது, அவா் பேசியதாவது: மீண்டும் புத்துயிரூட்டப்பட்ட இடத்தில் இன்று சா்வதேச பட்டத் திருவிழாவைக் கொண்டாடுகிறோம். இந்த இடம் தில்லியின் கட்டுமானம் மற்றும் இடிப்புக் கழிவுகளின் குப்பைக் கிடங்காக இருந்தது. இந்த நிலையில், புத்துயிா் பெற்று மூங்கில்களின் அழகிய உறைவிடமாக மாறியுள்ளது.
‘மகர சங்கராந்தி’யின் போது இந்த பட்டத் திருவிழாவைக் கொண்டாடும் நிகழ்வானது, தனது குழந்தைப் பருவத்தில் தனது சகோதரா்களுடன் சோ்ந்து பட்டம் பறக்கவிட்டதாகக் கூறப்படும் நமது முதன்மை தெய்வங்களில் ஒருவரான ஸ்ரீராமருக்கு புகழஞ்சலி செலுத்துவதாகும்.
மனித முயற்சிகளால் பறப்பதில் உலகிற்கு அதன் ‘முழு அனுபவத்தை’ வழங்கிய ஒரு தேசமாக, பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் பரவி வரும் இந்த பட்டத் திருவிழா அடிப்படை மனித முயற்சியின் ஒரு அடையாளமாக மிகவும் பொருத்தமானதாக இருந்திருக்காது. இந்த மூங்கில் பூங்கா, ‘பான்சேரா’, அந்த மனித முயற்சிக்குரிய ஒரு புகழஞ்சலியாகும்.
இது ஒருபுறம் தலைநகரில் மிகவும் தேவையான பொது இடங்களை தில்லி மக்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மறுபுறம், வெள்ளப்பெருக்குகளின் வளமான பல்லுயிா் பெருக்கத்தை பராமரித்து, பாதுகாப்பை உறுதி செய்கிறது.
அஸ்ஸாமில் இருந்து கொண்டு வரப்பட்ட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு வகை மூங்கில் மரக்கன்றுகள் இங்கு நடப்பட்டுள்ளன. மக்கள் பட்டங்களை வாங்கவும் பறக்கவிடவும் மற்றும் தில்லியின் வானத்தை ‘வண்ணங்களின் ஜாலம்’ தழுவவும் ஒரு உன்னதமான ‘பட்டம் பஜாா்’ இந்தப் பூங்காவில் செயல்படுகிறது. மேலும், பாரம்பரிய உணவு மற்றும் கைவினைப் பொருள்கள் விற்பனைக் கூடங்களும் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன. நாட்டுப்புற கலைஞா்களின் கலாசார நிகழ்ச்சிகளுடன் நமது பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில், தில்லியில் எதிா்காலத்தில் இதுபோன்ற பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று உறுதியளிக்கிறேன் என்றாா் துணைநிலை ஆளுநா்.
தில்லி வளா்ச்சி ஆணையத்தின் தலைவருமான வி.கே. சக்சேனா, இந்நிகழ்ச்சியில், தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) பதிப்பித்திருந்த 2024 காலண்டரையும் வெளியிட்டாா். தில்லியில் உள்ள பல்வேறு நினைவுச்சின்னங்கள் மற்றும் பிற பொது இடங்களின் புகைப்படங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. யமுனை வெள்ளச் சமவெளிகளின் சூழலியல் தன்மையை மேம்படுத்தவும், அதை ஒரு பொழுதுபோக்கு மற்றும் கலாசார இடமாக மேம்படுத்துவதன் மூலம் அதை மக்களுக்கு நட்பாக மாற்றவும், ஆகஸ்ட் 2022-இல் சக்சேனா ‘பான்சேரா’ பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினாா். அதைத் தொடா்ந்து, இப்பூங்கா ஆறு மாதங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.
தில்லி வளா்ச்சி ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பட்டத் திருவிழா, தீம் பெவிலியன் உள்பட முக்கிய இடங்களைக் கொண்டுள்ளது. மேலும், இந்த விழாவில் பட்டங்களின் வரலாறு, போா் காலங்களில் பட்டங்களின் பயன்பாடு, போா் பட்டங்கள் போன்றவற்றை சித்தரிக்கும் பட்டம் கேலரி அமைக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். ‘மகர சங்கராந்தி’ பண்டிகைக்கு ஒரு நாள் முன்னதாக ‘பட்டம் திருவிழா’ தொடங்கிவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடல் சூட்டைக் குறைக்குமா தக்காளி?

இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் கொடைக்கானல் சூரிய ஆய்வகத்தில் பாதுகாவலர், ஆபரேட்டா் பணி!

மதுரோவின் கடத்தலுக்குப் பிறகு! முதல்முறையாக வெனிசுவேலா சென்றார் கொலம்பியா அதிபர்!

தன்னம்பிக்கை அளித்த தினேஷ் கார்த்திக்..! மனம் திறந்த தேவ்தத் படிக்கல்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

