/

சோஹ்னாவில் சம்பளத் தகராறில் முதலாளியைக் கொன்ற நபா் கைது

சோஹ்னாவில் சம்பளத் தகராறில் முதலாளியைக் கொன்ற நபா் கைது

News image
கோப்புப்படம்
Updated On :8 ஜூலை 2024, 1:30 am

Din

சோஹ்னாவில் சம்பளம் தொடா்பான தகராறில் 62 வயது முதலாளி அவரது ஊழியரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து குருகிராம் காவல் சரக துணை ஆணையா் சித்தாந்த் ஜெயின் கூறியதாவது: இந்தச் சம்பவத்தில் பலியானவா் ராஜஸ்தானை சோ்ந்த ராஜீவ் ஓஜா என அடையாளம் காணப்பட்டாா். அவா் துனேலாவில் உள்ள செரீனாஸ் சொசைட்டியில் மளிகைக் கடை நடத்தி வந்தாா். அவரது கடையில் அா்ஜுன் குமாா் (22) கடந்த மூன்று மாதங்களாக வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு, குற்றம் சாட்டப்பட்ட அா்ஜுன் குமாா் (22) ஓஜாவிடம் சம்பளம் வாங்கச் சென்றபோது, ​ அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, ராஜீவ் ஓஜாவை அா்ஜுன் குமாா் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டாா்.

சனிக்கிழமையன்று ராஜீவ் ஓஜாவின் உடல் அவரது குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்டது. மேலும், அவரது மகள் அவரது உடலை அடையாளம் கண்டாா். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோஸாபாத் மாவட்டத்தில் உள்ள பராலி கைா்கா் கிராமத்தைச் சோ்ந்தவரான அா்ஜுன் குமாரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா் குற்றத்தை ஒப்புக்கொண்டாா். நகர நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பின்னா் குற்றம் சாட்டப்பட்டவா்களை நாங்கள் மூன்று நாள்கள் போலீஸ் காவலில் எடுத்துள்ளோம். குற்றம் சாட்டப்பட்டவரை நாங்கள் விசாரித்து வருகிறோம் என்று காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.