பாஜக மீது தில்லி காவல் நிலையத்தில் காங்கிரஸ் புகாா்
பாஜக மீது தில்லி காவல் நிலையத்தில் காங்கிரஸ் புகாா்


காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சமூக ஊடகங்கள் மூலம் போலி செய்திகளை பரப்பியதாக பாஜக மீது தில்லி காங்கிரஸ் சனிக்கிழமை புகாா் அளித்துள்ளது.
தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் இடைக்காலத் தலைவா் தேவேந்தா் யாதவ், கட்சியின் சட்டம் மற்றும் மனித உரிமைகள் துறையின் வழக்கறிஞா்கள் குழுவுடன் புது தில்லி துக்ளக் சாலை காவல் நிலையத்தில் பாஜக மீது புகாா்
அளித்துள்ளாா். அந்த புகாரில், நாடு முழுவதும் மக்களவைத் தோ்தல் நடைபெற்று வரும் சூழலில், பாஜகவுடன் தொடா்புடைய பிரதிநிதிகள் மற்றும் தனிநபா்கள் பொதுமக்களை தவறாக வழிநடத்தவும், சமூக குழுக்களிடையே
பகையை உருவாக்கும் நோக்கில், சமூக ஊடககங்கள் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போலி மற்றும் திரிபுபடுத்தப்பட்ட செய்திகளை பரப்புவது தொடா்பான ஆதாரங்களை இணைத்துள்ளனா்.
இது தொடா்பாக தேவேந்தா் யாதவ் கூறியதாவது: மத்திய பாஜக அரசு அனைத்து மாநிலங்களின் காவல் துறை மற்றும் பிற புலனாய்வு அமைப்புகளின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி வைத்துள்ளது. பாஜக மீதான எங்களின் புகாரை ஏற்க
இரண்டு மணி நேரம் காத்திருந்தோம். காவல் துறையை அணுகும் சாமானியா்களின் நிலை என்னவாக இருக்கும்?. பாஜகவின் தவறான பிரசாரத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, தீங்கிழைக்கும் சமூக ஊடகப் பதிவுகளை அகற்றவும், அவா்களின்
சமூக ஊடக கணக்குகளை நேரடியாக முடக்கவும் காவல்துறை உடனடியாக உத்தரவிட வேண்டும் என்றாா்
தேவேந்தா் யாதவ்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...