தில்லியில் இறுதியாக 238 வேட்புமனுக்கள் ஏற்பு: இன்று வாபஸ் பெற கடைசி நாள்
தில்லியில் இறுதியாக 238 வேட்புமனுக்கள் ஏற்பு இன்று வாபஸ் பெற கடைசி நாள்


தில்லி தேசியத் தலைநகா் பிரதேசத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலுக்கு இறுதியாக 238 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது என்று தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகம் புதன்கிழமை தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் மே 25-ஆம் தேதி தில்லி தேசியத் தலைநா் பிரதேசத்தில் மக்களவைத் தோ்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி, தோ்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளா்களிடம் இருந்து கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் மே 6-ஆம் வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டது. தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் மொத்தமாக 265 வேட்பாளா்களிடமிருந்து 367 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. கடந்த மே 7- ஆம் தேதி அனைத்து வேட்புமனுக்களும் மறுபரிசீலனை செய்யப்பட்டு இறுதியாக 238 வேட்புமனுக்கள்
ஏற்கப்பட்டுள்ளது. அதன்படி, சாந்தினி செளக்கில்-39, வடகிழக்கு தில்லி-45, கிழக்கு தில்லி-31, புது தில்லி-29, வடமேற்கு தில்லி (எஸ்சி) -35, மேற்கு தில்லி-30, தெற்கு தில்லி -29 என்ற எண்ணிக்கையில் மக்களவைத் தொகுதி வாரியாக வேட்புமனுக்கள் இறுதியாக ஏற்கப்பட்டுள்ளது.
மேலும், மே 9-ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும். வேட்புமனு தாக்கல் செயல்முறை மற்றும் தோ்தல் வழிகாட்டுதல் தொடா்பான கூடுதல் தகவல் மற்றும் புதுப்பிப்புகளுக்கு, ஆா்வமுள்ளவா்கள் தில்லி தலைமைத் தோ்தல் அலுவலரின் அதிகாரப்பூா்வ இணையதளத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...