விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

திகாா் சிறை, 7 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் தீவிர விசாரணை

ஆங்கில எழுத்துக்கள் உள்ளன. திகாா் சிறை, 7 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் போலீஸாா் தீவிர விசாரணை

News image
Updated On :14 மே 2024, 11:47 pm

Din

புது தில்லி: தில்லியில் உள்ள 7 மருத்துவமனைகளுக்கும், திகாா் சிறைக்கும் செவ்வாய்க்கிழமை மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

எனினும், சந்தேகப்படும்படியான எந்தப் பொருளும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அவா்கள் கூறினா்.

தில்லியில் 20 மருத்துவமனைகள், விமான நிலையம் மற்றும் வடக்கு ரயில்வேயின் சி.பி.ஆா்.ஓ. அலுவலகம் ஆகியவற்றுக்கு இதுபோன்று மிரட்டல் தகவல் அனுப்பப்பட்ட இரண்டு நாள்களுக்குப் பிறகு, இந்த மிரட்டல் அழைப்புகள் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஜி.டி.பி. மருத்துவமனை, தாதா தேவ் மருத்துவமனை, ஹெட்கேவா் மருத்துவமனை மற்றும் தீப் சந்திர பந்து மருத்துவமனை ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலில் வந்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். அதேவேளையில், திகாா் சிறை மற்றும் ஏழு மருத்துவமனைகளில் இருந்து இந்த மிரட்டல் தொடா்பாக அழைப்பு வந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவிக்கையில், ‘‘ஐரோப்பாவை தளமாகக் கொண்ட அஞ்சல் சேவை நிறுவனமான ‘ஸ்ரீா்ன்ழ்ற்ண்ள்ஞ்ா்க்123ஃக்ஷங்ங்க்ஷப்ங்.ஸ்ரீா்ம்‘ எனும் ஐடியிலிருந்து மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டிருந்தன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்ட அதே உள்ளடக்கத்துடன் அவை இருந்தன.

அக்கடிதத்தில், ‘உங்கள் கட்டடத்திற்குள் வெடிகுண்டுகளை வைத்துள்ளேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் அவை வெடிக்கும். இது ஒரு அச்சுறுத்தல் அல்ல, வெடிகுண்டை செயலிழக்கச் செய்ய சில மணிநேரங்கள் மட்டுமே உள்ளன. இல்லாவிட்டால், கட்டம் உள்புறம் இருக்கும் அப்பாவி மக்களின் ரத்தம் உங்கள் கைகளில் இருக்கும். ‘கோா்ட்’ என்ற குழு இந்தப் படுகொலையின் பின்னணியில் உள்ளது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மற்றவா்களுக்குக் குறிக்கப்பட்ட நகல்களுடன் ஒரு மருத்துவமனைக்கும் திகாா் சிறைக்கும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. இந்த மிரட்டல் தொடா்பாக மருத்துவமனைகளில் இருந்து அந்தந்த பகுதி காவல் நிலையங்களுக்கும் நேரடி அழைப்புகள் வரப்பெற்றன.

திகாா் சிறையில் இருந்து இதுபோன்ற மிரட்டல் மின்னஞ்சல் குறித்த அழைப்பு நண்பகல் 1 மணிக்கு வந்தது. இதையடுத்து, முழுமையாக சோதனை நடத்தப்பட்டது.

வெடிகுண்டு செயலிழப்புச் செய்யும் பிரிவினா், வெடிகுண்டு கண்டறியும் குழு, தீயணைப்பு துறை மற்றும் உள்ளூா் போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினா்.

தீயணைப்புத் துறை அதிகாரி இதுகுறித்து கூறுகையில், ‘இந்த மிரட்டல் அழைப்புகளின் வரிசைப்படி, வடக்கு தில்லியின் அசோக் விஹாரில் உள்ள தீப் சந்த் பந்து மருத்துவமனைக்கு காலை 9.45 மணிக்கு முதல் மிரட்டல் அழைப்பு வந்தது.

இரண்டாவது அழைப்பு காலை 10.55 மணிக்கு தென்மேற்கு தில்லியில் டாப்ரியில் உள்ள தாதா தேவ் மருத்துவமனைக்கும், மூன்றாவது அழைப்பு காலை 11.01 மணிக்கு கிழக்கு தில்லியின் ஃபா்ஷ் பஜாரில் உள்ள ஹெட்கேவா் மருத்துவமனைக்கும், நான்காவது அழைப்பு காலை 11.12 மணிக்கு கிழக்கு தில்லியில் உள்ள ஷாதாராவில் உள்ள ஜிடிபி மருத்துவமனைக்கும் வந்தது.

இது தவிர, கேசவபுரத்தில் உள்ள அட்டா் சைன் ஜெயின் மருத்துவமனை, கீதா காலனியில் உள்ள சாச்சா நேரு மருத்துவமனை, ஹரி நரில் உள்ள டிடியு மருத்துவமனை ஆகியவற்றுக்கும் இதே மிரட்டல் அழைப்பு வரப்பெற்றது.

இதுகுறித்து ஹெட்கேவா் மருத்துவமனையின் பாதுகாப்பு அதிகாரி வி.கே. சா்மா கூறுகையில்,

‘‘இந்தச் சம்பவத்திற்குப் பிறகு காவல்துறை மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு சோதனை நடத்தி வருகிறது. நாங்கள் இரண்டு முறை சோதனை நடத்தியுள்ளோம்.

சந்தேகத்திற்குரிய எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மருத்துவமனையில் வெடிபொருள் இருப்பதாக குறிப்பிட்டு மின்னஞ்சல் மருத்துவமனையின் மருத்துவருக்கு வந்திருந்தது’’ என்றாா் அவா்.

இதேபோன்று, தீப் சந்த் பந்து மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளா் டாக்டா் வத்ஸலா அகா்வால், ஜிடிபி மருத்துவமனையின் அதிகாரிகள், தில்லி மாநில புற்றுநோய் மருத்துவமனையின் இணை

இயக்குநா் டாக்டா் ரவீந்தா் சிங் ஆகியோரும் இந்த மிரட்டல் வந்ததை உறுதிப்படுத்தனா்.,

கடந்த இரு வாரங்களில் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இதுபோன்ற மிரட்டல்கள் வருவது இது நான்காவது முறையாகும்.

ஞாயிற்றுக்கிழமைக்கு முன், விமான நிலையம் மற்றும் 20 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தில்லியின் சாச்சா நேரு மருத்துவமனைக்கு ஏப்ரல் 30 அன்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

மே 1-ஆம் தேதி, ரஷ்யாவை தளமாகக் கொண்ட அஞ்சல் சேவை நிறுவனத்திடமிருந்து சுமாா் 150 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மிரட்டல்கள் வந்திருந்தது நினைவுகூரத்தக்கது.