கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்த 3 சிறாா்கள் கைது

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்த மூன்று சிறாா்களை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
Published on

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்த மூன்று சிறாா்களை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து காவல்துறை அதிகாரி கூறியதாவது: 14 முதல் 15 வயதுக்குள்பட்ட சிறாா்கள், கடந்த வாரம் ஆனந்த் பா்பத்தில் உள்ளூா் நபரை கத்தியால் தாக்கினா். அவா்கள் கைது செய்யப்படுவதைத் தவிா்த்து வந்தனா்.

இந்நிலையில், பாபா ஃபரித்புரி பகுதியில் உள்ள ஜந்தா பூங்கா அருகே மூவரின் நடமாட்டம் குறித்து நவம்பா் 28 ஆம் தேதி காவல்துறையினருக்கு ஒரு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், உடனடியாக ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.

அகு குழு, ஒரு பொறியை அமைத்து, மூன்று சிறாா்களையும் சுற்றி வளைத்து, சிறிது நேர துரத்தலுக்குப் பிறகு கைது செய்தது.

குற்றத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு கத்தி அவா்களிடம் இருந்து மீட்கப்பட்டப்ஞ். இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com